Published:Updated:

``உள்ளே என்ன இருக்கிறது என்று பாருங்கள்..!" - திருவள்ளுவர் காவி நிற சர்ச்சை குறித்து கோவை ஆட்சியர்

கோவை ஆட்சியர்

கோவை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தில் திருவள்ளுவர் காவி நிறத்தில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக ஆட்சியர் சமீரன் விளக்கம் அளித்திருக்கிறார்.

``உள்ளே என்ன இருக்கிறது என்று பாருங்கள்..!" - திருவள்ளுவர் காவி நிற சர்ச்சை குறித்து கோவை ஆட்சியர்

கோவை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தில் திருவள்ளுவர் காவி நிறத்தில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக ஆட்சியர் சமீரன் விளக்கம் அளித்திருக்கிறார்.

Published:Updated:
கோவை ஆட்சியர்

கோவை, கொடிசியா வளாகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு புத்தகக் கண்காட்சி தொடங்கியது. அதையொட்டி அங்கு தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 5,000 மாணவர்கள் ஒன்றாகக் கலந்துகொண்ட திருக்குறள் திரள் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்குறள் திரள் வாசிப்பு
திருக்குறள் திரள் வாசிப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

5,000 மாணவர்களும் ஒரே அறையில் அமரவைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அதிகாரத்துக்கு 2 குறள்கள் வீதம், 20 குறள்களை அனைத்து மாணவ, மாணவிகளும் திரளாக வாசித்தனர். மேலும், மாணவர்களிடம் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும்விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் திருக்குறள் புத்தகமாகவும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அந்தப் புத்தகத்தில் திருவள்ளுவர் காவி நிறத்தில் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து சமூக வலைதளங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டுவருகிறது.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ``இது தவறான கருத்து. பார்வையில் குழப்பம் என்றும் சொல்லலாம். நான் திருக்குறள் புத்தகத்தின் அட்டை என்ன நிறத்தில் இருக்கிறது என்று பார்க்கவில்லை.

சமீரன்
சமீரன்

அதன் உள்ளே என்ன இருக்கிறது என்றுதான் நாம் பார்க்க வேண்டும். அதில் அனைத்து நிறங்களும் இருக்கின்றன. அது ஒரு பொக்கிஷம்” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.