Published:Updated:

இந்து முன்னணி நிகழ்ச்சியில் கோவை திமுக மாவட்டப் பொறுப்பாளர்?! - விவாதத்தைக் கிளப்பிய நோட்டீஸ்

இந்து முன்னணி நிகழ்ச்சி நோட்டீஸில் திமுக

கோவை மாவட்ட இந்து முன்னணி நிகழ்ச்சி நோட்டீஸில், திமுக மாவட்டப் பொறுப்பாளர் பெயர் இடம்பெற்றிருப்பது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

இந்து முன்னணி நிகழ்ச்சியில் கோவை திமுக மாவட்டப் பொறுப்பாளர்?! - விவாதத்தைக் கிளப்பிய நோட்டீஸ்

கோவை மாவட்ட இந்து முன்னணி நிகழ்ச்சி நோட்டீஸில், திமுக மாவட்டப் பொறுப்பாளர் பெயர் இடம்பெற்றிருப்பது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

Published:Updated:
இந்து முன்னணி நிகழ்ச்சி நோட்டீஸில் திமுக

கோவை மாவட்டத்தில் திமுக, பாஜக இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவிவருகிறது. இந்நிலையில், இந்து முன்னணி சார்பாக நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில், திமுக மாவட்டப் பொறுப்பாளர் பெயர் இடம் பெற்றிருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது.

கோவை
கோவை

கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பில், சுந்தராபுரம் பகுதியில் விசர்ஜன ஊர்வல பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஓர் அறிவிப்பு நோட்டீஸ் அச்சிடப்பட்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில் சிறப்பு விருந்தினர்கள் பிரிவில், திமுக கோவை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி (திமுக) மற்றும் திமுக கவுன்சிலர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது. அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘திமுக மாவட்டப் பொறுப்பாளர் இந்து முன்னணி கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளலாமா?’ என்று திமுக தொண்டர்களே கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இது குறித்து மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியிடம் விளக்கம் கேட்டபோது, ``அப்படி ஒரு நோட்டீஸ் அச்சடித்ததே எனக்குத் தெரியாது. என் அனுமதி இல்லாமல், பெயரைப் பதிவிட்டுள்ளனர். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுவாக நல்ல காரியங்களுக்கு, யார் நன்கொடை கேட்டாலும் கொடுப்போம்.

மருதமலை சேனாதிபதி
மருதமலை சேனாதிபதி

ஆனால், இந்த நிகழ்வு குறித்து எனக்கும், அதில் குறிப்பிட்டுள்ள எங்கள் கட்சிக்காரர்கள் யாருக்குமே தகவல் தெரியவில்லை. அவர்களாகவே பெயர்களை அச்சடித்துள்ளனர்’’ என்றார்.

இது குறித்து அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு விவரங்களைச் சொல்லி, விளக்கம் கேட்டோம். ஆனால், அவர்கள் நம் அழைப்பைத் துண்டித்துவிட்டனர். நாம் மீண்டும் அவர்களைத் தொடர்புகொண்டபோதும், அழைப்பை ஏற்கவில்லை.