Published:Updated:

`எங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்' - கோவை தொழில் பூங்கா விவகாரத்தில் கொதிக்கும் விவசாயிகள்!

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவை அன்னூர் அருகே, விளை நிலத்தை கையகப்படுத்தி, தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

`எங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்' - கோவை தொழில் பூங்கா விவகாரத்தில் கொதிக்கும் விவசாயிகள்!

கோவை அன்னூர் அருகே, விளை நிலத்தை கையகப்படுத்தி, தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Published:Updated:
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில், கிட்டத்தட்ட 3,850 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்க, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் முடிவு செய்தது. இதற்காக, அக்கரை செங்கப்பள்ளி, குப்பனூர், பொகலூர், வடக்கனூர், இலுப்பநத்தம், பெள்ளேபாளையம் ஆகிய ஆறு ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் 3,731 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கோவை
கோவை

இவற்றில் சுமார் 2,000  ஏக்கர் விளை நிலமாக இருப்பதால், விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக போராட்டக் குழு ஒன்றை உருவாக்கி, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி, அரசாணை வெளியிட்டது அவர்களை மேலும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளளது. இதையடுத்து, அன்னூர் அருகே 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இருசக்கர வாகனங்களில் பேரணி நடத்தினர்.

அன்னூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அன்னூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து, அன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் விவசாய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளும் பங்கேற்றனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறுகையில், ``விவசாய நிலம் விவசாயிகளுக்கு மட்டும்தான் சொந்தம். அரசு எங்களுக்கான நிரந்தரத் தீர்வை கொடுக்க வேண்டும். உடனடியாக இந்தத் திட்டத்தை கைவிடுகிறோம் என்று தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்தகட்டமாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவோம்” என்றனர்.

அன்னூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அன்னூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் போராட்டத்தின் காரணமாக, அந்தப் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அந்தப் பகுதியில் சற்று பரபரப்பான சூழல் நிலவியது.