Published:Updated:

` எங்க வாழ்வாதாரமே பாதிக்கும்!' - உயர்மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்; என்ன நடந்தது?

உயர்மின் கோபுரம்

நிலமதிப்பு வீழ்ச்சியடைந்து வாழ்வாதாரம் பாதிக்க வாய்ப்பிருப்பதால், உயர்மின் கோபுரத்தை மாற்றுப்பாதையில் அமைக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

` எங்க வாழ்வாதாரமே பாதிக்கும்!' - உயர்மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்; என்ன நடந்தது?

நிலமதிப்பு வீழ்ச்சியடைந்து வாழ்வாதாரம் பாதிக்க வாய்ப்பிருப்பதால், உயர்மின் கோபுரத்தை மாற்றுப்பாதையில் அமைக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

Published:Updated:
உயர்மின் கோபுரம்

மின்வாரியம் சார்பாக கோவை அரசூர் – ஈங்கூர் வழித்தடம் விளை நிலங்கள் வழியே, 230 கிலோவாட் உயர்மின்கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி, எலச்சிபாளையம் திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட செம்மாண்டம்பாளையம், ராக்கியாபாளையம், செட்டிபாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், செங்கப்பள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள விளைநிலங்களின் வழியே உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.

உயர்மின் கோபுரம் போராட்டம்
உயர்மின் கோபுரம் போராட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனால் சோளம், பருத்தி, காய்கறிப் பயிர்கள், தென்னை, வேம்பு உள்ளிட்ட வளர்ந்த மரங்கள் சேதமடையும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நிலமதிப்பு வீழ்ச்சியடைந்து வாழ்வாதாரம் பாதிக்க வாய்ப்பிருப்பதால், உயர்மின் கோபுரத்தை மாற்றுப்பாதையில் அமைக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், எலச்சிபாளையத்தில் உள்ள விளைநிலங்களின் வழியே உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் இன்று காலை தொடங்கின.

உயர்மின் கோபுரம்
உயர்மின் கோபுரம்

இதைக் கண்டித்து விவசாயிகள், அங்குள்ள உயர் மின் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

``விரைவில் மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் குதிப்போம்” என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism