Published:Updated:

`டி.ஜி.பி சார் மன்னிப்பு கேட்டார்!' - போலீஸால் தாக்கப்பட்ட கோவை ஸ்விகி ஊழியர்

டி.ஜி.பி சைலேந்திர பாபு

`அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. வழக்கம் போல உங்கள் வேலைகளைத் தொடரலாம். இனி உங்கள் வாழ்க்கையில் எந்தப் பிரச்னையும் வராது.'

`டி.ஜி.பி சார் மன்னிப்பு கேட்டார்!' - போலீஸால் தாக்கப்பட்ட கோவை ஸ்விகி ஊழியர்

`அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. வழக்கம் போல உங்கள் வேலைகளைத் தொடரலாம். இனி உங்கள் வாழ்க்கையில் எந்தப் பிரச்னையும் வராது.'

Published:Updated:
டி.ஜி.பி சைலேந்திர பாபு

கோவை அவிநாசி சாலையில் மோகனசுந்தரம் என்கிற ஸ்விகி டெலிவரி ஊழியரை, சதீஷ் என்கிற போக்குவரத்து காவலர் தாக்கும் வீடியோ வைரலானது. ஒரு பெண்ணை இடித்துவிட்டு நிற்காமல் சென்ற, தனியார் பள்ளிப் பேருந்தை நிறுத்தி கேள்வி கேட்டதற்காகக் காவலர் சதீஷ், மோகனசுந்தரத்தைத் தாக்கியதாகத் தகவல் வெளியானது.

கோவை ஸ்விகி ஊழியரை தாக்கிய போலீஸ்
கோவை ஸ்விகி ஊழியரை தாக்கிய போலீஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து காவலர் சதீஷ் மீது, மோகனசுந்தரம் காவல்துறையில் புகார் அளித்தார். அதனடிப்படையில் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை பணியிடை நீக்கமும் செய்தது மட்டுமல்லாமல் கைது செய்து, காவல்நிலைய பிணையில் விடுவித்திருந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், மோகனசுந்தரத்தைத் தொடர்புகொண்ட தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு சம்பந்தப்பட்ட காவலர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துக் கூறி, அவர் நலம் பெற வாழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டி.ஜி.பி ஆறுதல்
டி.ஜி.பி ஆறுதல்

இதுகுறித்து மோகனசுந்தரத்திடம் கேட்டபோது, ``என் வீடு அருகே நிறைய போலீஸார் வந்திருந்தனர். நான் மிகவும் பதற்றத்தில் இருந்தேன். அப்போதுதான் செல்போனில் அழைப்பு வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எதிரில் என்ன பேசினார்கள் என்றுகூட எனக்கு சரியாகக் கேட்கவில்லை. நான் இதை எதிர்பார்க்கவில்லை. பிறகு, குரலை வைத்துதான் அது டி.ஜி.பி சார் எனத் தெரிந்தது. `நடந்த சம்பவத்துக்கு போலீஸ் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எதுக்கும் பயப்பட வேண்டாம். உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது.

ஸ்விகி ஊழியர் மோகனசுந்தரம்
ஸ்விகி ஊழியர் மோகனசுந்தரம்

அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. வழக்கம் போல உங்கள் வேலைகளைத் தொடரலாம். இனி உங்கள் வாழ்க்கையில் எந்த பிரச்னையும் வராது என உறுதியளிக்கிறேன்’ என்று கூறினார். அது எனக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கிறது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism