Published:Updated:

காயத்துடன் சுற்றும் மக்னா யானை! - கோவை வனத்துறை முக்கிய அறிவிப்பு

மக்னா யானை
மக்னா யானை

கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காயத்துடன் சுற்றிவரும் மக்னா யானை குறித்து வனத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருப்பதால், கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வாயில் காயத்துடன், உணவு சாப்பிட முடியாமல் ஒரு மக்னா (தந்தம் இல்லாத ஆண் யானை) யானை சுற்றுவதை வனத்துறையினர் பார்த்திருக்கிறார்கள். வனத்துறை அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முயன்றபோது, அந்த யானை ஆனைக்கட்டி வழியாக கேரளாவுக்குள் சென்றுவிட்டது.

மக்னா யானை
மக்னா யானை
கோவைக்கு வரும் யானை... உயிர் தப்புமா? | Shock Report | Elephant Deaths

இதையடுத்து, மன்னார்காடு பகுதி வனத்துறையினர் அந்த யானைக்குச் சிகிச்சையளித்தனர். உடல்நலக்குறைவால், யானை சற்று மெலிந்து காணப்படுகிறது.

அந்த யானை தமிழக-கேரள எல்லையில் வலம்வந்தாலும், கேரள மக்களுக்கு அது நன்கு பரிச்சயமானது. அங்கு அந்த மக்னா யானைக்கு `புல்டோசர்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். காரணம், அந்த யானை வீடுகளை இடித்து தரமட்டமாக்கும் செயல்களில் அடிக்கடி ஈடுபடுமாம். அதனால், கேரள மக்கள் அந்த யானையை `புல்டோசர்’ என்று அழைக்கிறார்கள். மக்னா யானையின் நாக்குப்பகுதி சிதறி, மேல் தாடை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

மக்னா யானை
மக்னா யானை

அந்த யானை அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டால் காயமடைந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. இந்தநிலையில், கடந்த வாரம் அந்த யானை கேரளாவிலிருந்து மீண்டும் தமிழகம் வந்தது.

கோவைக்கு வரும் யானை... உயிர் தப்புமா? | Shock Report | Elephant Deaths

இதையடுத்து, அந்த யானையைக் கண்காணிப்பு கேமரா அமைத்தும், தனிப்படை அமைத்தும் வனத்துறை தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். வனத்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், யானை நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கலந்த உணவை உட்கொள்கிறது. இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ்,``நேற்று முன்தினம் இரவு, மக்னா யானை 8 கி.மீ தூரம் நடந்து மூன்று குடிசை வீடுகளைச் சேதப்படுத்தியிருக்கிறது.

மக்னா யானை
மக்னா யானை

மேலும், பயிர்களையும் சாப்பிட்டிருக்கிறது. எனவே, சின்னத்தடாகம் சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள், மஞ்சள், மிளகாய், இஞ்சி ஆகியவற்றை அரைத்து, தண்ணீரில் கரைத்து, அவற்றை அரிசியில் கலந்து வீட்டைச் சுற்றி ஆங்காங்கே தூவிவிட்டால், யானை அருகில் வராது“ எனக் கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு