Published:Updated:

``செந்நாய் மீண்டும் காட்டுக்குள் சென்றுவிட்டது; மக்கள் அச்சப்பட வேண்டாம்!'' - கோவை வனத்துறை அதிகாரி

செந்நாய்
செந்நாய் ( Photo: // Gaja Mohanraj )

ஊருக்குள் புகுந்த செந்நாய் வனப்பகுதிக்கு விரப்பட்டுவிட்டது. எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம் என கோவை மாவட்ட வன அதிகாரி கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் மாநகரின் முக்கியப் பகுதியான உக்கடம் பெரியகுளத்தில் அடர்ந்த வனப்பகுதியில் வாழக்கூடிய ஊன் உண்ணியான செந்நாய் கண்டறியப்பட்ட செய்தி மக்களை பீதியடையச் செய்துள்ளது. இதன் நடமாட்டத்தை பறவை ஆர்வலரான கஜ மோகன்ராஜ் பார்த்துள்ளார்.

செந்நாய்
செந்நாய்
Photo: // Gaja Mohanraj
கேரள மாணவர்கள் தினசரி வந்து செல்வதற்குத் தடை!-கோவை மாவட்டத்துக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

குளங்களில் உள்ள பறவைகளை படம் பிடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ள இவர், உக்கடம் பகுதியில் பறவைகளைப் படம் பிடிக்கும்போதுதான் இந்த ஒற்றை செந்நாய் கண்டுள்ளார். இதுகுறித்து கஜ மோகன்ராஜ் எடுத்தப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. வனத்துறையும் இது செந்நாய்தான் என்று உறுதி செய்தது.

கூட்டத்துடன் சேர்ந்து வாழக்கூடிய விலங்கான செந்நாய், வனப்பகுதியில் இருந்து 10 கி.மீ தொலைவு வெளிவந்தது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து வந்தனர்.

``இரை தேடி கூட்டத்துடன் சென்று வேட்டையாடுவதுதான் செந்நாய்களின் வழக்கம். செந்நாய்கள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியில் வந்து வேட்டையாடுவது சமீப காலமாக அதிகரித்து வருகின்றன” என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கூறினர்.

செந்நாய்
செந்நாய்
Photo: // Gaja Mohanraj

இந்நிலையில், கோயம்புத்தூர் நகருக்குள் செந்நாய் புகுந்துள்ளதால் உக்கடம் முதல் சிறுவாணி வரை உள்ள மக்கள் மிகுந்த பாதுகாப்பாக இருக்கவும், குழந்தைகளை வெளியில் அனுப்பக் கூடாது எனவும், அது மிகவும் கொடிய விலங்கு என்றும் சமூகவலைதளங்களில் பரவிய தகவலால் மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்ட வன அலுவலர் அசோக்குமாரிடம் கேட்டபோது, ``செந்நாய் தனியாக வருவது மிகவும் அரிதான சம்பவம். வன மருத்துவர் உள்ளிட்ட எங்கள் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். செந்நாய் வனத்தில் இருந்து எப்படி வெளி வந்தது என்பது தெரியவில்லை. ஆனால், ஒருபக்கம் ஜே.சி.பி வைத்து வேலை செய்து கொண்டிருந்ததால் அது வனப்பகுதிக்குள் செல்ல முடியவில்லை.

செந்நாய்
செந்நாய்
Photo: // Gaja Mohanraj
நீலகிரி: `ஊருக்குள் வரும் காட்டுயானைகளை வனத்துக்குள் விரட்ட தனிக்குழு!’ - வனத்துறை அமைச்சர்

எங்கள் குழு இரவு முழுவதும் அதை கண்காணித்தனர். அதைத் தொடர்ந்து வனத்தை நோக்கி செந்நாயை விரட்டினோம். அது அப்போதே எட்டிமடை ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு