Published:Updated:

தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த யானை; பின்னணியில் வேட்டை கும்பலா?

உயிரிழந்தது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பது தெரியவந்தது. மேலும் அந்த யானையின் இரண்டு தந்தங்களும் வெட்டி எடுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. வன கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த யானையின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்தனர்.

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் ஜவ் காடு வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓர் யானை உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, களத்தில் இருந்த வனத்துறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

வனத்துறையினர்
வனத்துறையினர்
பிரமாண்ட தந்தத்துக்காக வேட்டையாடப்பட்டதா யானை? குற்றவாளியை நெருங்கும் வனத்துறை!

அதன் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.

அப்போது, உயிரிழந்தது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பது தெரியவந்தது. மேலும் அந்த யானையின் இரண்டு தந்தங்களும் வெட்டி எடுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. வன கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த யானையின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்தனர்.

யானை தந்தம் எடுக்கப்பட்ட பகுதி
யானை தந்தம் எடுக்கப்பட்ட பகுதி

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ``மாவட்ட வன அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.” என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யானை உயிரிழந்தது, வெள்ளியங்கிரி மலை அடிவாரப் பகுதி. இதனால் வேட்டை கும்பல் இந்த பகுதியில் ஊடுருவி, தந்தத்துக்காக யானை வேட்டையாடியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே கடந்த மாதம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதியில் உயிரிழந்த யானையின் உடலில் இருந்து மாயமான தந்தம், சில நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது.

வனத்துறை
வனத்துறை
யானை தந்தம் கடத்தல்: வனத்துறையை ஏமாற்ற வழியை மாற்றிய கும்பல்; சிக்கியது எப்படி?

இதனால், யானைகளின் மரணங்கள் குறித்து வனத்துறை தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காட்டுயிர் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு