Published:Updated:

கொரோனா மாஸ்க்: தங்க மாஸ்க் 2.75 லட்சம், வெள்ளி மாஸ்க் 15 ஆயிரம் ரூபாய்...! கோவை கலாட்டா

தங்க வெள்ளி மாஸ்க்
தங்க வெள்ளி மாஸ்க்

கோவை தங்க நகை வியாபாரி ராதாகிருஷ்ணன் சுந்தரம் தங்கம் மற்றும் வெள்ளியில் கொரோனா மாஸ்க் தயாரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்துவிட்டது.

தங்க வெள்ளி மாஸ்க்
தங்க வெள்ளி மாஸ்க்
பார்பி பொம்மைக்காக குட்டி மாஸ்க்..! #KidsTalentCorner

பாதிப்பும், உயிரிழப்புகளும் தினசரி புதிய உச்சங்களைத் தொட்டு வருகின்றன. இதனால், பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. முகக்கவசம் அணிவது, சானிட்டைஸர் உபயோகிப்பது, அடிக்கடி கைகழுவுவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவைதான் இப்போதைக்கு நோய்த்தொற்றிலிருந்து காக்கும் வழிகள் என்பதை மக்களும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

கொரோனா, ஊரடங்கு போன்றவற்றால் திருமண நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டபடி நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. பல கோடி ரூபாயில் திருமணங்களைத் திட்டமிட்டவர்களும், பட்ஜெட் திருணமங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தக் காலகட்டத்துக்குத் தகுந்த வகையில் வட இந்தியாவில் தங்கம் மற்றும் வைரக் கற்கள் பதித்த மாஸ்க்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.

தங்க மாஸ்க்
தங்க மாஸ்க்

தமிழகத்திலும் கோவை தொப்பம்பட்டி பிரிவைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி ராதாகிருஷ்ணன் சுந்தரம் ஆச்சாரி என்பவர், தங்கம் மற்றும் வெள்ளியில் மாஸ்க்குகளை தயாரித்துள்ளார். இந்தக் காலகட்டத்திலும் ராதாகிருஷ்ணனுக்கு தங்கம், வெள்ளி மாஸ்க்குகளுக்கான ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றனவாம்.

ராதாகிருஷ்ணன் சுந்தரத்திடம் பேசினோம். "35 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறேன். ஆரம்பத்தில், பொற்கொல்லராக தங்க நகைகளைத் தயாரித்து வந்தோம். கடந்த சில ஆண்டுகளாக புதுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தங்கம் மற்றும் வெள்ளியில் ஆடைகளைத் தயாரித்து வருகிறேன். குழந்தைகள், பெரியவர்களுக்கு ஆடைகள், தலைப்பாகை, ஷால் போன்வற்றைத் தயாரித்திருக்கிறேன்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா காலகட்டத்தில் நகை வியாபாரம் மிகுந்த பின்னடைவைச் சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட 80 சதவிகித வியாபாரம் முடங்கிவிட்டது. ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டும் என்று யோசித்தபோதுதான், மாஸ்க் ஐடியா தோன்றியது.

தங்க மாஸ்க் என்றவுடன் வட இந்தியாவைப் பார்த்துச் செய்கிறோம் என்று நினைத்துவிட வேண்டும். அவர்கள், தங்கத் தகட்டிலோ அல்லது ஒரு மாஸ்க்கில் தங்கம் மற்றும் வைரக் கற்களை பதித்தோ, தங்க மாஸ்க் என்ற பெயரில் விற்கிறார்கள். நாங்கள் மெஷினில், தங்கக் கட்டியைவிட்டு அதை சன்னமான கம்பியாக இழுத்து, 0.06 மி.மீ அடர்த்திக்கு மாற்றிச் செய்கிறோம். அதாவது, நம் முடியின் அடர்த்தி அளவுக்குத் தங்கத்தை மாற்றி மாஸ்க் தயாரிக்கிறோம்.

தங்க வெள்ளி மாஸ்க்
தங்க வெள்ளி மாஸ்க்
கேரள தங்கம் கடத்தல் வழக்கு: `காட்டிக்கொடுத்த போன் அழைப்புகள்' -பெங்களூருவில் சிக்கிய ஸ்வப்னா

எனவே, பார்ப்பதற்கு இது துணி மாஸ்க் போலத்தான் இருக்கும். வட இந்தியாவில் தயாரிக்கும் மாஸ்க்குகள் ஆபரணம் போல இருப்பதால் அவற்றை நீண்ட நேரம் பயன்படுத்த முடியாது.

நாங்கள் தயாரித்துள்ள மாஸ்க்கை திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆபரணம் போலவும் அணியலாம். நான்கு அடுக்குகள் கொண்ட இதைச் சாதாரண மாஸ்க்குக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம். எடைக்குறைவான, சருமத்தை உறுத்தாத இதை அதிகம் கசக்காமல் துவைத்தும் பயன்படுத்தலாம்.''

விளக்கமாகச் சொல்பவர் தயாரித்துள்ள தங்க மாஸ்க் 46.5 கிராம் எடையும் வெள்ளி மாஸ்க் 40 கிராம் எடையும் கொண்டவை.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

தங்க மாஸ்க்கின் விலை ரூ.2.75 லட்சம், வெள்ளி மாஸ்க்கின் விலை ரூ.15,000. வேலைப்பாடுகள் அதிகம் என்பதால் ஒரு மாஸ்க் தயாரிக்க ஒரு வாரம் ஆகும். குறைந்தபட்சம் 20 கிராம் தங்கத்தில் இருந்து மாஸ்க் தயாரிக்க முடியும். எடைக்கேற்ப டிசைனும் மாறும்.

''தங்கத்தை இந்த அடர்த்திக்கு மாற்றும்போது, தங்கம் வீணாகாது, எடையும் குறையாது.

வெள்ளி மாஸ்க்
வெள்ளி மாஸ்க்

அடுத்தகட்டமாக என்-95 மாஸ்க் டிஸைனில் தங்க, வெள்ளி மாஸ்க்குகளும், தங்கத்திலேயே கிளவுஸ் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

கடந்த 6 மாதங்களாக தங்கத்தின் விலை ஏறிக்கொண்டிருக்கிற சூழ்நிலையில், இதுபோன்ற புதுமையான யோசனைகள் எங்களுக்கு கைகொடுக்கும்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

இப்போதும், வங்கிகளில் எங்களுக்கு கடன் உதவி கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் சரிசெய்ய அராசங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இன்றைய தங்க விலை நிலவரத்தை இங்கே அறிந்துகொள்ளவும்.

இன்றைய வெள்ளி விலை நிலவரத்தை இங்கே அறிந்துகொள்ளவும்.

அடுத்த கட்டுரைக்கு