Published:Updated:

இந்து பக்தர்களுக்குக் குடிநீர் வழங்கிய ஜமாத்.. கோவை கோனியம்மன் தேர்த்திருவிழாவில் மதநல்லிணக்கம்

கோனியம்மன் தேர்
கோனியம்மன் தேர்

கோவை கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவில் பக்தர்களுக்கு, இஸ்லாமியர்கள் தண்ணீர் கொடுத்து உபதேசம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதனிடையே, மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

கோனியம்மன் தேர்
கோனியம்மன் தேர்

கோவையில் ஒவ்வோர் ஆண்டும் கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான கோனியம்மன் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.

கோனியம்மன் கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படுவதால், இந்தத் தேர்த் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். அதிகாலை ஐந்து மணிக்குத் திருத்தேரில் எழுந்தருள்வதற்காக அம்மன் புறப்பாடு நடைபெற்றது. மதியம் இரண்டு மணி அளவில் திருத்தேர் வடம்பிடித்தல் தொடங்கியது.

கோனியம்மன் தேர்
கோனியம்மன் தேர்

ராஜவீதி, ஒப்பணக்காரவீதி, கருப்பக் கவுண்டர்வீதி வழியாகச் சென்று மாலை ஆறு மணி அளவில் தேர் நிலையை அடைந்தது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்பட்டிருந்தன. தேர் வலம் வரும் பகுதியைச் சுற்றி குடிநீர், உணவு, பழச்சாறுகள், மோர், ரோஸ்மில்க் போன்றவை கொடுக்கப்படுவது வழக்கம்.

கோனியம்மன் தேர்
கோனியம்மன் தேர்

அதன் ஒருபகுதியாக, ஒப்பணக்கராவீதி அத்தர் ஜமாத் பள்ளிவாசல் சார்பாகப் பக்தர்களுக்குப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. ஜமாத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், பக்தர்களுக்குக் குடிநீர் கொடுத்து உபதேசம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு