Published:Updated:

ஒருமுறை கடந்தால் 3 மடங்கு கட்டணம்! - கோவை எல் அண்ட் டி சுங்கச்சாவடி சர்ச்சை

கோவை எல் அண்ட் டி பைபாஸ் சுங்கச்சாவடியை ஒவ்வொரு முறை கடக்கும்போதும், குறைந்தது இரண்டு முதல் நான்கு என்ட்ரிகளுக்கான பணத்தை எடுப்பதாகப் புகார் எழுந்தது.

``நான் 2019-ம் ஆண்டிலிருந்து சொல்லிவருகிறேன். இது வாளையார் எல் அண்ட் டி டோல்கேட். ஆள் இல்லாத டோல்கேட்டில் என்ட்ரி விழுந்துகொண்டிருக்கிறது. ஒரு முறை சென்றால் பலமுறைக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் உங்கள் அலுவலகம் வந்து முறையிட முடியுமா... எப்போது சரி செய்வீர்கள்..?”

வாக்குவாதம்
வாக்குவாதம்
Vikatan

என்று பொதுமக்களில் ஒருவர், எல் அண்டி டி பைபாஸ் சுங்கச்சாவடி அதிகாரிகளைச் சரமாரியாகக் கேள்வி எழுப்புகிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

கோவை மாவட்டம், மதுக்கரை முதல் அவிநாசி சாலை நீலம்பூர் வரை சுமார் 30 கி.மீ தொலைவுக்கு எல் அண்ட் டி நிறுவனம் பைபாஸ் சாலை அமைத்தது. இந்தப் பாதையில் ஆறு சுங்கச்சாவடிகள் உள்ளன. ``ஒவ்வொரு முறை அந்த சுங்கச்சாவடியைக் கடக்கும்போதும், குறைந்தது இரண்டு முதல் நான்கு என்ட்ரிகளுக்கான பணத்தை எடுத்துவிடுகின்றனர்.

கேரளா செல்வதற்கு இதுதான் முக்கியப் பாதை. ஒரு நாளைக்கு லட்சணக்கான வாகனங்கள் இந்த வழியைக் கடக்கின்றன. கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர்” என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வைரலான அந்த வீடியோவில் பேசும் நபருக்கு மட்டுமே 2,000 ரூபாய் வரை பாக்கியிருப்பதாகக் கூறுகிறார். என்ட்ரியை கவனிப்பவர்கள் அதிர்ச்சியடைந்து, எல் அண்ட் டி ஊழியர்களிடம் கேட்டால், ``சாஃப்ட்வேர் பிரச்னை. பணத்தைக் கொடுத்துவிடுகிறோம்” என்று கூறுகின்றனர்.

ஆனால், பலர் எவ்வளவு பணம் எடுக்கின்றனர் என்பதைச் சரியாக கவனிப்பதில்லை. லாரி ஓட்டுநர்கள், கால் டாக்ஸி ஓட்டுநர்கள் என்று பலரும் இந்த விஷயத்தை எதிர்த்து போராடிவருகின்றனர்.

இது குறித்து எல் அண்ட் டி நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது, ``நெட்வொர்க் பிரச்னையால் வாகனங்கள் கடக்கும்போது கூடுதலாகப் பணம் எடுக்கப்படுகிறது. விரைவில் இந்தப் பிரச்னை சரியாகிவிடும். வீடியோவில் பேசும் அந்த நபரும் சமாதானமாகிவிட்டார்.

கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலை
கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலை

கூடுதல் கட்டணம் தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். அவர்களுக்குப் பணத்தைத் திருப்பியளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு