Published:Updated:

`பதிவு எண் இல்லாத இன்னோவா கார்’ - கோவை மேயர் விளக்கம்

பதிவு எண் இல்லாத காரைப் பயன்படுத்தும் கோவை மேயர்

கோவை மாநகராட்சி மேயர், கடந்த சில வாரங்களாகப் பதிவு எண் இல்லாத இன்னோவா காரைப் பயன்படுத்திவருவது விவாதமான நிலையில், அதற்கு மேயரின் விளக்கத்தைக் கேட்க அவரைத் தொடர்பு கொண்டோம்...

`பதிவு எண் இல்லாத இன்னோவா கார்’ - கோவை மேயர் விளக்கம்

கோவை மாநகராட்சி மேயர், கடந்த சில வாரங்களாகப் பதிவு எண் இல்லாத இன்னோவா காரைப் பயன்படுத்திவருவது விவாதமான நிலையில், அதற்கு மேயரின் விளக்கத்தைக் கேட்க அவரைத் தொடர்பு கொண்டோம்...

Published:Updated:
பதிவு எண் இல்லாத காரைப் பயன்படுத்தும் கோவை மேயர்

சீனியர்கள் பலரும் முண்டியடித்துக்கொண்டிருந்த நிலையில், சர்ப்ரைஸ் என்ட்ரியாக கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு டிக் அடிக்கப்பட்டவர் கல்பனா ஆனந்தகுமார். எந்தப் பதவியிலும் இல்லாத தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாக கல்பனாவின் நியமனம் வரவேற்கப்பட்டது.

கல்பனா ஆனந்தகுமார்
கல்பனா ஆனந்தகுமார்

ஆனால், சமீபகாலமாக அவரைச் சுற்றி அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்துவருகின்றன. அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தீவிர விசுவாசம், அதிகாரிகளுடன் பனிப்போர், கணவர் ஆனந்தகுமாரின் ஆதிக்கம் என ஏராளமான சர்ச்சைகள் உள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த மாதம்தான் அவரின் கணவர் ஆனந்தகுமார், வசூல் செய்வது தொடர்பான ஓர் ஆடியோ வெளியானது. இந்நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் மேயருக்கு புதிய இன்னோவா கிரிஸ்டா கார் வாங்கப்பட்டுள்ளது. புதிய கார் வாங்கி, அதை மேயர் பயன்படுத்தத் தொடங்கி சில வாரங்கள் ஆகிவிட்டன.

கணவருடன் மேயர் கல்பனா
கணவருடன் மேயர் கல்பனா

ஆனாலும் அவர் பதிவு எண் இல்லாமலேயே தினசரி அந்த காரைப் பயன்படுத்திவருகிறார். ``சமூகத்தில் உயர் பொறுப்பிலுள்ள மேயரே இப்படிச் செயல்படலாமா... விதிகள் அனைவருக்கும் ஒன்றுதான்” எனச் சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

இது குறித்து மேயர் கல்பனாவிடம் விளக்கம் கேட்டபோது, ``மாநகராட்சி சார்பில் ஆணையர், மேயர் இருவருக்கும் புதிய கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இரண்டு வாகனங்களுக்கும் பதிவு எண் கொண்ட பலகை ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்தவரை, வாகனம் பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும்,

விரைவில் அங்கீகரிக்கப்பட்ட வாகன டீலரிடமிருந்து, ஆர்.டி.ஓ வாகன எண் பொறிக்கப்பட்ட பலகையை நேரடியாக வழங்கவிருப்பதாகவும் கூறுகின்றனர். மேயர் வண்டிக்கு 7800 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது. வாகன எண் பலகை விரைவில் ஒட்டப்படும்” என்றார்.