Published:Updated:

கோவை: `கொரோனா கொல்லி' மைசூர்பா! - ஸ்வீட் கடைக்கு சீல்; உரிமமும் ரத்து

கொரோனா மைசூர்பா
கொரோனா மைசூர்பா

கோவையில் மூலிகை மைசூர்பா மூலமாகக் கொரோனா குணமாக்கப்படும் என்று விளம்பரப்படுத்தி விற்பனை செய்த இனிப்புக் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. கோவை மாநகரிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவலாகிக்கொண்டிருக்கிறது. கோவை அரசு மருத்துவமனை டெக்னீஸியன், கருமத்தம்பட்டியைச் சேர்ந்த இளைஞர், குறிச்சி பகுதியைச் சேர்ந்த 5 குழந்தை ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை
கோவை
கோவை: 400 படுக்கைகள்;  திரைப்பட அனுபவம்! - கொரோனா சிகிச்சை மையமான கொடிசியா

அதேபோல, இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரபாண்டி பிரிவைச் சேர்ந்த 65 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார். அவரது குடும்பத்தினர் 4 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ‘ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமாகும் அதிசயம்... ஆம் மக்களே இது சின்னியம்பாளையத்திலும் வெள்ளலூரிலும் நிறைவேறியது. கொரோனாவுக்கு எதிரான இந்த மூன்றாம் உலகப்போரில், பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி உள்ளவர்களுக்கு இலவசமாக எங்களது மைசூர்பாவை கொடுக்கத் தயாராக இருக்கிறோம்” என்று நோட்டீஸ் அடித்திருந்தனர்.

கொரோனா மைசூர்பா நோட்டீஸ்
கொரோனா மைசூர்பா நோட்டீஸ்

அந்த நோட்டீஸ் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

ஆயுள் எக்ஸ் கேப்சூல்; வெளிநோயாளிகளின் பட்டியல்! -திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்த பின்னணி

இதையடுத்து, அந்த நோட்டீஸை அடித்த தொட்டிபாளையம் ஶ்ரீராம் விலாஸ் நெல்லை லாலா கடையில் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். அப்போது, எந்த அனுமதியும் பெறாமல், மூலிகை மைசூர்பா, கொரோனா கொல்லி மைசூர்பா என்று பச்சை நிறத்தில் 50 கிராம் பாக்கெட் ரூ.50-க்கும், ஒரு கிலோ மைசூர்பா ரூ.800-க்கும் விற்றது தெரியவந்தது. சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தகத்தை, திரிபலா, மஞ்சள் தூள், முருங்கையிலை, அகத்தி இலை, கற்பூரவல்லி இலை, உட்பட 19 வகை மூலிகைகளை அந்த மைசூர்பாவில் கலந்துள்ளனர்.

கொரோனா மைசூர்பா
கொரோனா மைசூர்பா

இதையடுத்து, ரூ.1 லட்சம் மதிப்புள்ள, 120 கிலோ மைசூர்பா பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடையின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடைக்கு சீல் வைத்து அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு