கோவை - திருச்சி சாலையில் ரூ.253 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது. கடந்த மாதம் 11-ம் தேதி மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டே வாரங்களில் வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அங்கு ஆய்வுசெய்த அதிகாரிகள், பேரிகார்டை போட்டு, மேம்பாலத்தின் மீது வேகத்தடை அமைத்தனர்.
கிட்டத்தட்ட எட்டு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டு, கடந்த வாரம் முதல் மேம்பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. இதற்கிடையே நேற்று நடந்த விபத்தில் மீண்டும் ஓர் ஆண் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அதிகாரிகள் மீண்டும் ஆய்வுசெய்தனர்.

இது குறித்து கோவை மக்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். ``சில வாகன ஓட்டிகள் வேகமாக வருகிறார்கள், பாலத்தைத் திட்டமிட்டு கட்டவில்லை. வேகத்தடைக்கு பதில் வேறு திட்டத்தை அமல்படுத்தியிருக்க வேண்டும்” என்று கூறிவருகின்றனர்.
முக்கியமாக, “மேம்பாத்தின் இருபுறமும், இரும்புக்கம்பியைக் கொண்டு தடுப்புச்சுவர்போல அமைத்து விபத்தைத் தவிர்க்கலாம்.” என்று கூறியிருந்தனர்.
இந்தநிலையில், விபத்து அதிகம் நடக்கும் மேம்பாலத்தின் மீதுள்ள வளைவில் மணல் மூட்டைகள் மற்றும் பேரிகார்டுகளை அதிகாரிகள் வைத்துள்ளனர்.

விபத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தும்விதமாக, விரைவில் இரும்புக்கம்பியை தடுப்புச் சுவராக எழுப்பவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.