Published:Updated:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தினசரி மாலை தேநீர் - அசத்தும் கோவை முதியோர் இல்லம் பாட்டிகள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேநீர் கொடுக்கும் பாட்டிகள்

கோவை மாநகராட்சி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, முதியோர் இல்லம் பாட்டிகள் தினசரி மாலை தேநீர் கொடுத்துவருகின்றனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டுவருகிறது. இதை ஈரநெஞ்சம் என்கிற தன்னார்வ அறக்கட்டளை பராமரித்துவருகிறது. சராசரி முதியோர் இல்லம்போல அல்லாமல்,

கோவை
கோவை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அங்குள்ள பாட்டிகள் சற்றே வித்தியாசப்பட்டு இயங்குவார்கள். அந்த முதியோர் இல்லத்துக்கு அருகிலேயே மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெரும்பாலும் குடிசைப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள்தான் அங்கு படிக்கின்றனர். அதனால், பள்ளியில் மதியம் சத்துணவு கொடுத்தாலும், காலை உணவு என்பது எல்லோருக்கும் வாய்க்காது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு..!
அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு..!

இதை உணர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, முதியோர் இல்லத்தில் உள்ள பாட்டிகள் தினசரி காலை பள்ளிக் குழந்தைகளுக்கும் காலை உணவு சமைத்து கொடுத்துவந்தனர். கொரோனா காரணமாக இடையில் அது தடைப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், தற்போது மாலையில் மாணவர்களுக்கு தேநீர் மற்றும் பிஸ்கெட் வழங்கிவருகின்றனர். இது குறித்து மாணவர்களுக்கு தேநீர் கொடுத்துவரும் பாட்டிகள், ``10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை சிறப்பு வகுப்பு நடக்கிறது. பலர் உற்சாகமின்றி சோர்வாகக் காணப்பட்டனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேநீர் கொடுக்கும் பாட்டிகள்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேநீர் கொடுக்கும் பாட்டிகள்

அதனால்தான், அவர்களுக்கு தேநீர் கொடுத்துவருகிறோம். இவர்களைத்தான் எங்கள் பேரக் குழந்தைகளாகப் பார்க்கிறோம். அவர்கள் முகத்தில் உற்சாகத்தைப் பார்ப்பதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி” என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism