Published:Updated:

சுதந்திர இந்தியாவின் அனைத்துத் தேர்தல்களிலும் வாக்களித்த கோவை முதியவர்! - 106 வயதில் மரணம்!

மாரப்ப கவுண்டர்

சுதந்திர இந்தியாவின் அனைத்துத் தேர்தல்களிலும் வாக்களித்த கோவை முதியவர் காலமானார்.

சுதந்திர இந்தியாவின் அனைத்துத் தேர்தல்களிலும் வாக்களித்த கோவை முதியவர்! - 106 வயதில் மரணம்!

சுதந்திர இந்தியாவின் அனைத்துத் தேர்தல்களிலும் வாக்களித்த கோவை முதியவர் காலமானார்.

Published:Updated:
மாரப்ப கவுண்டர்

கோவை கருப்பராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரப்ப கவுண்டர். 106 வயதான இவர் 1916-ம் ஆண்டு, ஜூன் 1-ம் தேதி பிறந்தார். விவசாயியான மாரப்பனுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். அவர்கள் மூலம் நான்கு பேரன்கள், நான்கு பேத்திகள் உள்ளனர். சுதந்திர இந்தியாவுக்கு முன்பே பிறந்ததால் காந்தி, நேரு போன்ற தலைவர்களின் பணிகளை நேரடியாகப் பார்த்தவர்.

வாக்கு
வாக்கு
கோப்புப் படம்

சுதந்திர இந்தியாவின் அனைத்துச் சட்டசபை தேர்தல்களிலும் வாக்களித்தவர் என்பதுதான் மாரப்பனின் சிறப்பம்சம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதாவது 1952-ம் ஆண்டு முதல் கடந்த 2021-ம் ஆண்டு வரை நடந்த அனைத்துச் சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார். இளைஞர்கள் பலரும் வாக்களிக்க ஆர்வம் காட்டாத நிலையில், கடந்த ஆண்டு இவர் நடந்தே சென்று வாக்களித்து கவனம் ஈர்த்தார்.

மாரப்ப கவுண்டர்
மாரப்ப கவுண்டர்

வருகின்றன நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வாக்களிக்க ஆர்வமாக இருந்திறுக்கிறார். இதற்கிடையே வயது முதிர்வு காரணமாக அவர் திடீரென்று இறந்துவிட்டார்.

இது குறித்து மாரப்பனின் உறவினர்கள் கூறுகையில், “அவர் பிறந்த விவரங்களை பெற்றோர் ஓலைச்சுவடியில் குறித்து வைத்துள்ளனர். அதனால் வயது துல்லியமாகத் தெரிந்தது. ஜனநாயகக் கடமையிலிருந்து விலகக் கூடாது என்று எல்லோரிடமும் சொல்லுவார்.

மரணம்
மரணம்
சித்திரிப்புப் படம்

உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சில வேட்பாளர்கள் அவரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றனர். ஆனால், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மரணமடைந்துவிட்டார்” என்றனர்.