Published:Updated:

கோவையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் படங்களின் அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பு!- கொதிக்கும் வே.ஈஸ்வரன்

கோவை

அமைச்சர் தலைமையில் திமுக முகவர் கூட்டம் நடக்கிறது. பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி கொடுக்கின்றனர். ஆனால்...

கோவையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் படங்களின் அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பு!- கொதிக்கும் வே.ஈஸ்வரன்

அமைச்சர் தலைமையில் திமுக முகவர் கூட்டம் நடக்கிறது. பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி கொடுக்கின்றனர். ஆனால்...

Published:Updated:
கோவை

குடியரசு தினவிழாவை முன்னிட்டு, டெல்லி அணிவகுப்பில் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டன. இதற்குப் பல்வேறு இடங்களிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து, “டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்ட ஊர்திகள்,

குடியரசு தின அணிவகுப்பு
குடியரசு தின அணிவகுப்பு

சென்னை குடியரசு தின விழாவில் கலந்துகொள்ளும். அந்த ஊர்தி தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் கோவை குறிச்சி, சுந்தராபுரம் பகுதிகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களை வைத்து வாகன பிரசாரம் செய்ய காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாகவும்,

அனுமதி மறுப்பு
அனுமதி மறுப்பு

அந்தப் பகுதி அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதாலும் நிகழ்ச்சி நடத்த அனுமதியில்லை என்று காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது அந்த இயக்கத்தைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வே.ஈஸ்வரன் கூறுகையில், ``அமைச்சர் தலைமையில் திமுக முகவர் கூட்டம் நடக்கிறது. பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி கொடுக்கின்றனர். டாஸ்மாக் நடக்கிறது. அடுத்து தேர்தலும் நடக்கப்போகிறது.

ஈஸ்வரன்
ஈஸ்வரன்

வேலுநாச்சியாரையும், தீரன் சின்னமலையையும் எடுத்து சென்றால் மட்டும் கொரோனா பரவுமா? நாங்கள் கூட்டம் சேர்த்துக்கூடப் போவதில்லை. சமூக இடைவெளி உட்பட கொரோனா நடைமுறைகளைப் பின்பற்றித்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

தமிழக அரசின் எண்ணத்தைத்தானே, நாங்களும் செய்கிறோம். தமிழக அரசின் ஊர்தியை எல்லா இடங்களிலும் காட்சிப்படுத்த உள்ளனர். அவர்கள் கொண்டு செல்லும்போது கொரோனா பரவாதா?

கோவை ஜல்லிக்கட்டு
கோவை ஜல்லிக்கட்டு

கொரோனா பரவலுக்காக குடியரசு தின நிகழ்ச்சி அனைத்தையும் ரத்து செய்துவிட்டார்களா... எதற்காக இந்த விஷயத்துக்கு மட்டும் அனுமதி மறுக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.