Published:Updated:

ஆசை வார்த்தை பேசி ₹300 கோடி மோசடி; கோவை தம்பதியினர் மீது வழக்குப்பதிவு; என்ன நடந்தது?

Money (Representational Image)

தமிழ்நாடு முழுவதும் ரூ.300 கோடிக்குமேல் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், கோவை கணவன் மனைவி மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆசை வார்த்தை பேசி ₹300 கோடி மோசடி; கோவை தம்பதியினர் மீது வழக்குப்பதிவு; என்ன நடந்தது?

தமிழ்நாடு முழுவதும் ரூ.300 கோடிக்குமேல் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், கோவை கணவன் மனைவி மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Published:Updated:
Money (Representational Image)

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விமல்குமார். `Mr. Money' என்கிற பெயரில் யூடியூப் சேனல் நடத்திவரும் விமல், ஆல்பா ஃபாரெக்ஸ் மார்க்கெட் (Alpha Forex Market) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நியச் செலவாணி வர்த்தகம், பங்கு சந்தை, கிரிப்டோகரன்ஸி போன்றவற்றை கற்று கொடுத்து அதில் முதலீடு செய்யவும் வைத்திருக்கிறார்.

விமல்
விமல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யூடியூப் மூலம் மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளுக்கு பயணித்து மக்களை நேரடியாக சந்தித்து முதலீடு செய்ய வைத்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன்படி, ஒரு முதலீட்டாளர் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், ஓராண்டுக்குள் ரூ.1.80 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதுபோக, முதலீட்டுக்கு ஆள் சேர்த்து விட்டால் அதன் மூலமும் கமிஷன் கிடைக்கும் என்று சொல்லியுள்ளார்.

விமலிடம் பணம் கொடுத்தபோது
விமலிடம் பணம் கொடுத்தபோது

அதை நம்பி தமிழ்நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்டோர் கோடிக்கணக்கில் விமலிடம் முதலீடு செய்தனர். சில நாள்கள் நல்லபடியாக சென்றுகொண்டிருக்க, நாளடைவில் விமல் கூறியபடி பணம் கொடுக்கவில்லை என்று முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்தாண்டு விமல் தலைமறைவாகிவிட்டார். கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கு மேல் விமல் மற்றும் அவருடன் இருந்தவர்கள் மோசடி செய்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் விமலிடம் ரூ.16 லட்சம் முதலீடு செய்திருக்கிறார்.

போராட்டம்
போராட்டம்

ஆனால், சொன்னபடி பணம் தராமல் மோசடி செய்ததால், அவர் கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் விமல் மற்றும் அவர் மனைவி ராஜேஸ்வரி உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு இடங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனைவியுடன் விமல்
மனைவியுடன் விமல்

இதுகுறித்து பேசிய போலீஸார், `மேலும் சிலரிடம் விசாரணை நடத்தி ஆதாரங்களை திரட்டி வருகிறோம். விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்துள்ளனர்.

இது போன்ற மோசடி நிறுவனங்களை மக்கள் மட்டுமல்ல, காவல் துறையும் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, அவர்களை செயல்பட விடாமல் செய்ய வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism