Published:Updated:

எச்சரித்தும் மாறாத டி.டி.எஃப் வாசன்... ஜி.பி.முத்துவுடன் அபாய பயணம்... பாய்ந்தது வழக்கு!

டி.டி.எஃப் வாசன், ஜி.பி முத்து

டிக்டாக் புகழ் ஜி.பி முத்துவுடன் அதிவேகமாக பைக்கில் சென்ற யூ-ட்யூபர் டி.டி.எஃப் வாசன் மீது கோவை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் வாசன். இவர் Twin throttlers என்ற யூ-ட்யூப் சேனலை நடத்தி வருகிறார். பைக் சாகசங்கள், ட்ராவ்லாக் வீடியோக்களை தனது சேனலில் பதிவேற்றி வருகிறார்.

டி.டி.எஃப் வாசன் பைக் ரைட்
டி.டி.எஃப் வாசன் பைக் ரைட்

வாசனுக்கு 2கே கிட்ஸ் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அவரை டி.டி.எஃப் வாசன் என்று அழைத்து வருகின்றனர். ஆனால் அண்மை காலமாக அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் அருகே, ரசிகர்களை சந்திக்கிறேன் என மிகப்பெரிய கூட்டத்தை அழைத்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தார். தேசிய நெடுஞ்சாலைகளில் வாசன் அதிவேகத்தில் பைக்கில் பறப்பதாகவும் புகார் எழுந்தது.

ஜி.பி முத்து டி.டி.எஃப் வாசன்
ஜி.பி முத்து டி.டி.எஃப் வாசன்

`இளைஞர்களுக்கு தவறான முன் உதாரணம் ஆகிவிடும். எனவே, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பலரும் கூறிவந்தனர். அப்போதே காவல்துறை அவரை எச்சரித்து அனுப்பியது. இருப்பினும் வாசன் மாறவில்லை எனக் கூறப்படுகிறது.

எச்சரித்தும் மாறாத டி.டி.எஃப் வாசன்... ஜி.பி.முத்துவுடன் அபாய  பயணம்... பாய்ந்தது வழக்கு!

சமீபத்தில் டிக்டாக் புகழ் ஜி.பி.முத்துவை பைக்கில் அமர வைத்து கோவை - பாலக்காடு சாலையில் அசுர வேகத்தில் சென்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து வாகனத்தை அஜாக்கிரதையாக, மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் வகையில் இயக்கியதால் வாசன் மீது போத்தனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.