Published:Updated:

பணம் கேட்டு மிரட்டியதால் மாணவி தற்கொலை; மிரட்டிய நபருக்கு வலைவீசும் கோவை போலீஸ்!

தற்கொலை - Representational Image
தற்கொலை - Representational Image

கோவை கல்லூரி மாணவி தற்கொலை பின்னணியில் உள்ள பணம் பறிக்கும் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி, காளப்பட்டி சாலையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கேசவ்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கேசவ்குமார், அவிநாசி சாலை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

கேசவ்குமார், மாணவியின் வீட்டு அருகில்தான் தங்கியுள்ளார். இதையடுத்து, இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதை கேசவ்குமார் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளார்.

கோவை
கோவை
தற்கொலை... பிரச்னைகளுக்கான முடிவல்ல, ஆரம்பம்!

அதன்படி, மாணவியை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.35,000 ரொக்கம் மற்றும் இரண்டு சவரன் தங்க நகை வாங்கியுள்ளார். மாணவியிடம் மேற்கொண்டு பணம் கேட்டு மிரட்டியதுடன், வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் கேசவ்குமார் மறுத்துள்ளார். மேலும், மாணவியின் ஏ.டி.எம் கார்டையும் அவர் பிடுங்கி வைத்துள்ளார்.

இதனால், மாணவி கேசவ்குமாருடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். ஆத்திரமடைந்த கேசவ்குமார், ``நாம் எடுத்துக்கொண்ட படங்களை மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன்” என்று மாணவியை மிரட்டியுள்ளார்.

Girl - Representational Image
Girl - Representational Image
Pixabay

அதேபோல, தன் நண்பர்களை வைத்தும் மாணவியை மிரட்டியுள்ளார். நிலைமையை தன் தோழிகளிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் மாணவி. ஒரு கட்டத்தில், அழுத்தம் தாங்க முடியாமல் மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மாணவியை மருத்துவமனையில் அனுமதித்து, சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் அவர் பெற்றோர்.

இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால், அந்த மாணவி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதற்காக, கேசவ்குமாரை கைது செய்ய தனிப்படை அமைத்து அவரைத் தேடி வருகின்றனர்.

தற்கொலை எண்ணம் எழுந்தால் தமிழக அரசின் 104 என்ற 24 மணி நேர சேவை எண்ணுக்கு அழைக்கலாம். இந்த இலவச தொலைபேசி சேவையில் உங்களின் மனநலக் குழப்பங்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.
அடுத்த கட்டுரைக்கு