Published:Updated:

லாக்டௌனில் அதிகரித்த போக்சோ வழக்குகள்; பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை முயற்சி!

ஊரடங்குக் காலத்தில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல இடங்களில், பெற்றோர்கள் கண்காணிப்பு இல்லாமல் குழந்தைகள் வீட்டில் இருந்ததும் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை உயர்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், ஊரடங்குக் காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான சிறார் வதை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த லாக்டௌனில் இன்னும் கூடியிருப்பதையும் இது உணர்த்துகிறது.

செய்தியாளர்களைச் சந்தித்த செல்வநாகரத்தினம், ``பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகக் கடந்த சில ஆண்டுகளில் நடந்த குற்றங்களைக் கணக்கிட்டு அவற்றைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குழந்தைகளுக்கு எதிராகக் கடந்த மூன்றரை ஆண்டுகளில் பதியப்பட்ட போக்சோ வழக்குகளை 4 பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு செய்தோம்.

செல்வநாகரத்தினம்
செல்வநாகரத்தினம்

அதன்படி, 12 முதல் 18 வயதுப் பெண் குழந்தைகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியது தொடர்பாக 73 வழக்குகளும், முகம் தெரிந்த நபரால் குழந்தைகள் சிறார் வதைக்கு உள்ளானது குறித்து 32 வழக்குகளும், குழந்தைத் திருமணம் தொடர்பாக 50 வழக்குகளும், போர்னோகிராபி தொடர்பாக 50 வழக்குகளும் என்று மொத்தம் 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போக்சோ தொடர்பாக விழிப்புணர்வு முகாம்களை மாவட்ட காவல்துறை மூலம் அதிகரிக்க உள்ளோம். அதன்படி ஆன்லைன் மூலமாக வகுப்பு நேரத்திலேயே குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வித்துறையுடன் இணைந்து செயல்பட உள்ளோம். தனியார் பள்ளிகளும் 20 நிமிடம் காவல்துறைக்கு ஒதுக்கிக் கொடுத்தால் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.

கோவை
கோவை

போக்சோ வழக்குகளில், முகம் தெரிந்தவர்களால் நடத்தப்படும் சிறார் வதைத் தொடர்பாகக் கைது செய்யப்படுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊரடங்குக் காலத்தில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல இடங்களில், பெற்றோர்கள் கண்காணிப்பு இல்லாமல் குழந்தைகள் வீட்டில் இருந்ததும் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை உயர்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. பெற்றோர், குழந்தைகளைத் தங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும்.

Representational Image
Representational Image
``தமிழகத்தில் குழந்தை திருமணம் நடத்தப்பட்டால் வழக்கு பாயும்!" – அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை!

மேலும் கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் தொடர்பாகத் தினசரி அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு