Published:Updated:

`50 ஆண்டுகளில் அடிக்க வேண்டியதை 5 ஆண்டுகளில் அடித்துவிட்டனர்'-வேலுமணியைச் சாடும் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்

வேலுமணி
வேலுமணி

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது பகீர் புகார் வைக்கிறார் கோவை ரேஸ்கோர்ஸ் ரகுநாத்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத், அ.தி.மு.க-வில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். சினிமா இயக்கம் மற்றும் தயாரிப்பில் ஆர்வம்காட்டும் ரகுநாத், `சிறுவாணி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதற்கிடையே, சமீபத்தில் அ.தி.மு.க-விலிருந்து விலகி ரகுநாத் தி.மு.க-வில் இணைந்தார்.

புகார்
புகார்
`சாதிரீதியாகச் செயல்படும் வேலுமணி' - சசிகலாவிடம் குமுறிய கோவை அ.தி.மு.க ஐடி விங் நிர்வாகி

இந்தநிலையில் கோவையில் அனைத்துத் துறை ஒப்பந்தங்களிலும் 12 சதவிகிதம் கமிஷன் பெறுவதை முன்னாள் அமைச்சர் வேலுமணி வாடிக்கையாக வைத்திருந்ததாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தார்.

அதேபோல வேலுமணிமீதும், அவருக்கு உடைந்தையாக இருந்த அதிகாரிகள், எம்.எல்.ஏ-க்கள் மீதும் மாவட்ட ஆட்சியரிடமும் ரகுநாத் புகார் அளித்துள்ளார். இது குறித்து ரகுநாத்திடம் பேசியபோது, ``வேலுமணி உள்ளாட்சித்துறையில் பெரும் ஊழலை கண்ணுக்கு தெரிவதுபோல வெளிப்படையாக செய்திருக்கிறார். இதில் ஒரு சில எம்.எல்.ஏ-க்களுக்கும் தொடர்பு இருக்கிறது.

ரகுநாத்
ரகுநாத்

ரேஸ்கோர்ஸ் சாலையை ரூ.40 கோடியில் மேம்படுத்துகிறேன் என்று சொல்லி, அங்கே இடித்த பழைய கட்டுமானப் பொருள்களை வைத்தே ஏதோ செய்துள்ளனர். கோவை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் ரூ.1,500 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`கோவை புறக்கணிக்கப்படுகிறது?' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி

குளங்களை மேம்படுத்துகிறோம் என்று சொல்லி அதிகமாக கொள்ளையடித்துள்ளனர். நொய்யல், அத்திக்கடவு அவினாசி திட்டத்திலும் ஊழல் நடந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகும்கூட, இவர் ஏதோ ஆளுங்கட்சியைப்போல எம்.எல்.ஏ-க்களை அழைத்து மேட்டுப்பாளையம் அருகே பூமி பூஜை போட்டிருக்கிறார். அதில் சில அதிகாரிகளும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

கோவை ஸ்மார்ட் சிட்டி
கோவை ஸ்மார்ட் சிட்டி

கோவையில் நடைபெற்றுவரும் மேம்பாலப் பணிகள் சரியாக இல்லை. குறைவான தொலைவுக்கு அதிக நிதி ஒதுக்குகின்றனர். மக்கள் உயிரையே பணயம் வைக்கின்றனர்.

50 ஆண்டுகளில் இல்லாத திட்டங்களை ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டதாக வேலுமணி கூறுகிறார். ஆனால், 50 ஆண்டுகளில் அடிக்க வேண்டியதை ஐந்து ஆண்டுகளில் அடித்துவிட்டனர் என்பதுதான் உண்மை. தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்திருக்கிறார். தற்போது தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.

வேலுமணிக்கு பின்னால் ரகுநாத்
வேலுமணிக்கு பின்னால் ரகுநாத்

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி வரை புகார் கொடுத்துள்ளேன். இது தொடர்பான ஆதாரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். இதை வெளியில் கொண்டுவருவதால் என்னை மிரட்டுகின்றனர். என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. எனக்குப் பாதுகாப்பு வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு