Published:Updated:

`நான் பார்க்காத ஜெயிலா?' - கோவை பேருந்து நிலையத்தைப் பதறவைத்த பிளேடு கபாலி

பிளேடு கபாலி
பிளேடு கபாலி

காந்திபுரம் சுற்றுவட்டாரங்களிலுள்ள வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் கபாலி மீது பலமுறை புகாரளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

``நான் பார்க்காத ஜெயிலா... காசு கொடு. கொடுக்க முடியாதா..? கபாலியோட லேட்டஸ்ட் அடி பார்த்துக்கோ... உன்னை விட மாட்டேன்...’’ என்று சொல்லிக்கொண்டே ஒரு போதை ஆசாமி இன்னொரு நபரை அடிக்கிறார். கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில்தான் இந்தக் காட்சி.

பிளேடு கபாலி
பிளேடு கபாலி
கும்பகோணம்: துரத்திச் சென்ற போலீஸ்; மர்மமான முறையில் இறந்து கிடந்த ரவுடி - நடந்தது என்ன?

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நேரம் அது. அந்த நேரத்திலும், போதை ஆசாமிகள் தகாத வார்தைகளில் பேசி கட்டிப்புரண்டு சட்டை போட்டுக்கொண்டனர்.

போலீஸ் விசாரணையில் அதில் ஒருவர், `பிளேடு கபாலி’ என்று அழைக்கப்படும் பிரபல ரெளடி என்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து காட்டூர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். கஞ்சா போதைக்கு அடிமையான பிளேடு கபாலி, பேருந்து நிலையத்தில் பயணிகளைக் காசு கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

போதைப்பொருள்
போதைப்பொருள்

அவர்மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கஞ்சா போதையில் சுற்றும் கபாலி, வாயிலுள்ள பிளேடால் துப்பி, மிரட்டி, நூதனமாக பிக்பாக்கெட்களில் ஈடுபடுவார். காந்திபுரம் சுற்றுவட்டாரங்களிலுள்ள வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் கபாலி மீது பலமுறை புகாரளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

திருட்டு
திருட்டு
representational image

மேலும் அவரால் மக்களுக்கு விபரீதம் எதுவும் ஏற்படுவதற்கு முன் காவல்துறை அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு