Published:Updated:

சோட்டா பீம் டு ஸ்பைடர்மேன்; பயன்படுத்தப்பட்ட முட்டை ஓடுகளில் ஓவியம்; அசத்தும் மாணவன்!

முட்டை ஓவியம்
முட்டை ஓவியம்

பயன்படுத்தப்பட்ட முட்டைகளில் தத்ரூபமாக கார்ட்டூன்களை ஓவியமாக வரைந்து ஊரடங்கை பயனுள்ள வகையில் மாற்றியிருக்கிறார் இந்த கோவை மாணவன்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால், கடந்த இரண்டு கல்வியாண்டுகளாக ஆன்லைன் வழியாகத்தான் வகுப்புகள் நடக்கின்றன. டிவிகளிலும், செல்போன்களிலும் மாணவர்கள் முடங்கிப் போக, பல பெற்றோர் தங்கள் பிள்ளைகள் குறித்துக் கவலைப்படவும் தொடங்கிவிட்டனர்.

முட்டை ஓவியம்
முட்டை ஓவியம்
மதுரை: பெண்ணின் அர்ப்பணிப்பைச் சொல்லும் 12 மணி நேர காபி ஓவியம்... மாணவியின் புதிய சாதனை!

இந்நிலையில், இந்த ஊரடங்குக் காலத்தைப் பயனுள்ள வகையில் மாற்றியிருக்கிறார் கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்ற மாணவர். அருகில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார் சஞ்சய்.

சிறுவயது முதல் பல வகை ஒவியங்கள் வரைவதில் அதீத ஆர்வம் கொண்ட இவர், ஆயில் முதல் பவுடர் வரை அனைத்தையும் பயன்படுத்தி நேர்த்தியாக ஓவியம் வரைவதில் வல்லமை கொண்டவர்.

முட்டை ஓவியம்
முட்டை ஓவியம்

தற்போதைய ஊரடங்குக் காலத்தில், பயன்படுத்தப்பட்ட முட்டையின் ஓடுகளில் குழந்தைகளின் கனவு நண்பர்களான சோட்டா பீம், டோரா - புஜ்ஜி, ஸ்பைடர்மேன் உள்ளிட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்களை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார் சஞ்சய்.

இதுகுறித்து மாணவர் சஞ்சய்யிடம் பேசினோம். ``எனக்கு சிறு வயதில் இருந்தே ஓவியம் மீது ஆர்வம் அதிகம். இப்போது ஸ்கூல் இல்லாததால் போரடிக்கிறது. அதனால் வழக்கத்தை மீறி நிறைய வரைய தொடங்கினேன். பொதுவாக, வீடுகளில் கீழே வீசும் முட்டை ஓடுகளைப் பயன்படுத்தி ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன்.

சஞ்சய்
சஞ்சய்

முதலில், அந்த முட்டை ஓட்டில் மண் மற்றும் பஞ்சை வைத்து நிரப்பிவிடுவேன். அதன் பிறகு ஓட்டின் மீது ஓவியங்கள் வரைவேன். அடுத்தகட்டமாக 90’ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கார்டூன்களையும் வரைய திட்டமிட்டுள்ளேன்” என்றார்.

நம் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கும் சஞ்சய்யையும் முட்டை கார்ட்டூன்ஸையும் அறிமுகப்படுத்தலாமே!

அடுத்த கட்டுரைக்கு