Published:Updated:

கோவை அதிர்ச்சி: செல்வபுரம் பகுதியில், ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

கோவை
கோவை

கோவை செல்வபுரம் பகுதியில், ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கோவையில், கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தீவிரமடைந்துவருகிறது. கடந்த இரண்டு நாள்களில் மட்டும், கோவையில் 120-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ்வாகியுள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ்க்கு சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

கோவை
கோவை
‘கோவை பீளமேடு கணேஷ் துணிக்கடைக்குச் சென்றவர்களுக்கு ரெட் அலர்ட்!' - ஆட்சியர் அறிவிப்பு

அதேபோல, கொரோனா வைரஸால் கோவையில் சனிக்கிழமை இருவர் உயிரிழந்தனர். கோவையில், கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. முக்கியமாக, கோவை தெற்குத் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.

முக்கியமாக செல்வபுரம் பகுதியில், கடந்த வாரம் சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, செல்வபுரம் ஹவுஸிங் யூனிட், செட்டிவீதி, ஐயப்பா நகர், தெலுங்குபாளையம் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது . ஐயப்பா நகர் பகுதியில் மட்டும் சுமார் 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கோவை
கோவை

அவற்றில், 105 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ``அந்தப் பகுதியில் தற்போதுவரை 20-30 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு இன்னும் உறுதி செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளனர். ஆனால், நம்பத்தகுந்த வட்டாரங்களில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால், கோவை மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோவை
கோவை

இதுகுறித்துப் பேசிய அப்பகுதியினர்,``மக்களை தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கச் சொல்லும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளும் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து, தங்களையும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு