Published:Updated:

விநாயகர் சதுர்த்தி: `கிறிஸ்துவ கல்வி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை';சர்ச்சையை ஏற்படுத்துவதாகப் புகார்!

விநாயகர்  சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி பண்டிகை தொடர்பாக கோவை கிறிஸ்துவ கல்வி நிறுவனத்தின் கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவை கே.என்.ஜி புதூர் பகுதியில் புனித பால் (St. Paul’s) கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனத்தின் பள்ளி, கல்லூரி பெயரில் அச்சிடப்பட்ட லெட்டர் பேட் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், "கிறிஸ்துவ சகோதர சகோதரிகளே... போதகர்களே... மிஷனரிகளே...

கடிதம்
கடிதம்
`விநாயகர் சதுர்த்தி பேரணி; வீடியோ விவகாரத்தில் குழுவுக்கு முழு அதிகாரம்!’  - அண்ணாமலை

மிஷனரி இயக்கத் தலைவர்களே... விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நாம் ஜெபயாத்திரை நடத்தி வருகிறோம்.

2017-ம் ஆண்டு 200 வாகனங்களிலும், 2018-ம் ஆண்டு 1,000 வாகனங்களிலும் சென்று ஜெபித்தோம். அதன் விளைவாக கோவை மாவட்ட ஆட்சியர் அனுமதியில்லாமல் யாரும் விநாயகர் சிலையை வெளியில் வைக்கக்கூடாது. சிலையின் அளவு இவ்வளவுதான் இருக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு நாள்களில் சிலையை கரைத்துவிட வேண்டும் போன்ற கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

புனிதா பால் கல்லூரி
புனிதா பால் கல்லூரி

இதனால் விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த சட்டங்களினால், தற்போது விநாயகர் சதுர்த்தியன்று பிரச்னை வராமல் அமைதி நிலவுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது எல்லாம் நம் ஜெபயாத்திரைகளின் விளைவுதான் என்று நம்புகிறோம். இந்தாண்டு இதை இன்னும் சிறப்பாக நடத்த உங்கள் ஆதரவு தேவை. வருகிற செப்டம்பர் 10- தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் அன்றைய தினமோ அல்லது உங்களுக்கு வசதியான நாளில் ஜெபயாத்திரை நடத்த விரும்புகிறேன்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

கொரோனா காலத்தில் இப்படிப்பட்ட ஜெபயாத்திரை மிகுந்த பலனளிக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16 எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த லெட்டர் பேடில், சேர்மன் மற்றும் நிர்வாக அறங்காவலர் டேவிட் என்பவர் பெயர் இடம் பெற்றுள்ளது.

ஆனால், கையொப்பம் இல்லை. இந்த கடிதம் பா.ஜ.க, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினரிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இதைக் கண்டித்தும் சேர்மன் டேவிட்டை கைது செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னனி அமைப்பினர் துடியலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள்,

இந்து முன்னணி முற்றுகை
இந்து முன்னணி முற்றுகை

“இதுபோன்ற அறிவிப்பு இந்துக்களுக்கு எதிராக உள்ளது. இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது” என்று கூறினர். மேலும், சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் போலீஸில் புகாரும் அளித்துள்ளனர்

இதுகுறித்து விளக்கம் கேட்க புனித பால் கல்வி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டோம். எதிரில் பேசிய ஓர் பெண்மணி, “அதை யார் செய்தார் என்று எங்களுக்கே தெரியவில்லை. எங்கள் சேர்மன் ஊரில் இல்லை. அவர் வந்ததும் உங்களை தொடர்பு கொள்கிறோம்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு