Published:Updated:

நீட் தேர்வு: `நீங்கள் எதிர்பார்த்ததைக் கொடுக்க முடியலை' - உருக்கமான கடிதம் எழுதி மாயமான கோவை மாணவன்

இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும், நம்பிக்கை இல்லாத விரக்தியால் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் விக்னேஷ் என்ற மாணவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமாகியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பதற்கு உதாரணமாக நீட் தேர்வும், உயிர்ப்பலியும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ``நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்வோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க தவறிவிட்டது” என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்துவருகின்றன.

நீட் தேர்வு மரணங்கள்
நீட் தேர்வு மரணங்கள்
நீட் இரண்டாம் கட்ட விண்ணப்பம்... பதிவும், மதிப்பெண் கணக்கீடும்!

இந்தநிலையில், இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் நம்பிக்கை இல்லாததால், கோவை மாவட்டத்தில் ஒரு மாணவர் விபரீத முடிவு எடுத்திருக்கிறார்.

நீலகிரி மாவட்டம், கெந்தரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாதன். இவர் கெந்தரை அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவரின் மனைவி அம்பிகாவதி. இவர்களின் மகன் விக்னேஷ் (19). நீட் தேர்வுக்குத் தயாராவதற்காகவே அம்பிகாவதி, விக்னேஷ் இருவரும் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள்.

கோவை
கோவை

ப்ளஸ் டூ முடித்துள்ள விக்னேஷ் ஏற்கெனவே, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியிருக்கிறார். ஆனால், தேர்ச்சிபெற முடியவில்லை. நீட் தேர்வுக்குத் தயாராகும்விதமாக பயிற்சி மையத்தில் சேர்ந்திருக்கிறார் விக்னேஷ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வையும் விக்னேஷ் எழுதியிருக்கிறார். இந்தநிலையில், நேற்று மதியம் வீட்டிலிருந்து விக்னேஷ் திடீரென்று மாயமாகியிருக்கிறார். அம்பிகாவதி, விக்னேஷைப் பல இடங்களில் தேடியிருக்கிறார். விக்னேஷ் கிடைக்கவில்லை. அவரின் படுக்கையறையில் விக்னேஷ் தனது டைரியில் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதிவைத்திருக்கிறார்.

விக்னேஷ்
விக்னேஷ்

அதில், `அப்பா அம்மாவுக்கு... நீங்கள் எதிர்பார்த்ததை என்னால் கொடுக்க இயலாது. இந்த முறையும் நீட் தேர்வில் ஏமாற்றம்தான். உண்மையைக் கூற எனக்கு பயமாக இருக்கிறது.

இதற்கு மேலும் இந்த வீட்டில் இருப்பதற்கோ... உங்களை `அப்பா, அம்மா...’ என்று அழைப்பதற்கோ எனக்குத் தகுதி இல்லை. சரியா, தவறா... என்று தெரியவில்லை. ஆனால், வீட்டைவிட்டுச் செல்ல முடிவு செய்துள்ளேன். இன்று நான் என் வெற்றிப் பாதையை நோக்கி வெகுதூரம் செல்கிறேன். என்னைத் தேட வேண்டாம். இன்னும் சில ஆண்டுகளில் திரும்பி வருவேன்... வெற்றி பெற்றவனாக. இது சத்தியம்...’ என்று எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இது குறித்து, அம்பிகாவதி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விக்னேஷைத் தேடிவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு