Published:Updated:

நீட் தேர்வில் வென்ற கோவை பழங்குடி மாணவி; சோதனைகளைக் கடந்து சாதனை படைத்த கண்ணீர்க் கதை!

ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ சிட்டி என்று பல பெருமைகளைக் கொண்ட கோவை மாநகருக்கு வெகு அருகில் இருக்கிறது சங்கவியின் கிராமம். ஆனால், மின்சாரம் இல்லை, சாதிச்சான்றிதழ் இல்லை, கழிப்பறை இல்லை என அந்த கிராமத்தில் பல அடிப்படை வசதிகள் இல்லை.

``சின்ன வயசுல இருந்தே டாக்டராகணுங்கிறதுதான் என்னோட ஆசை. அதுக்காகவே ப்ளஸ் 2-ல சயின்ஸ் குரூப் எடுத்தேன். சயின்ஸ் குரூப் படிச்ச எல்லாருக்கும் ரெக்கார்ட் நோட் எவ்வளவு முக்கியம்னு தெரியும். மெழுகுவத்தி வெளிச்சத்துல ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி, மழைக்காலத்துல மழையில நனையாம அதைப் பத்திரமா பாதுகாத்துப் படிச்சேன். அரசோட நீட் பயிற்சி வகுப்புல சேர்ந்தேன். ஆறு மார்க் குறைவா எடுத்து, நீட் தேர்வுல ஃபெயில் ஆகிட்டேன்.

தாயுடன் சங்கவி
தாயுடன் சங்கவி
கோவை: `70 டிகிரி சாய்வில் வீடுகள்; பள்ளிக்கு 5 கி.மீ நடை!’ - நாகுரூத்துபதி பழங்குடி கிராமம்

மேலும் என்கிட்ட சாதிச்சான்றிதழ் இல்லாததனால மேல் படிப்பைத் தொடர முடியல. அப்பாவும் திடீர்னு இறந்துட்டாரு” - கோவை திருமலையம்பாளையம் அருகே உள்ள ரொட்டிகவுன்டனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சங்கவி என்ற பழங்குடி மாணவிதான் வலிகள் நிறைந்த இந்த வார்த்தைக்குச் சொந்தக்காரர்.

ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ சிட்டி என்று பல பெருமைகளைக் கொண்ட கோவை மாநகருக்கு வெகு அருகில் இருக்கிறது சங்கவியின் கிராமம். ஆனால், மின்சாரம் இல்லை, சாதிச்சான்றிதழ் இல்லை, கழிப்பறை இல்லை என்று அந்த கிராமத்தில் பல அடிப்படை வசதிகள் இல்லை. ஊடகங்களில் அது தொடர்பான செய்திகள் வந்தன.

சங்கவி கிராமம்
சங்கவி கிராமம்

அந்த கிராமத்தில் இருந்து முதன்முதலாக பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட சங்கவி, எதிர்பாராத விதமாகத் தந்தையை இழந்தார். ஊடக செய்திகளால் சங்கவிக்கு உடனடியாகச் சாதிச்சான்றிதழ் கிடைத்தது. விகடன் செய்தியைப் பார்த்து, ரோட்டரி கோவை மெரிடியன் சங்கவியின் குடிசை வீட்டை கான்கிரீட் வீடாகக் கட்டி கொடுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சங்கவி நீட் பயிற்சி பெறுவதற்கும் பல்வேறு இடங்களில் இருந்து உதவிகள் கிடைத்தன. தொடர் முயற்சி காரணமாக, தற்போது 202 மார்க் எடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் சங்கவி. ``அப்பா மறைவுக்கு அப்பறம், அம்மாவுக்கு கண் பார்வையில பிரச்னை வந்துச்சு. முதல் முயற்சில நீட் தேர்வுல வெற்றி பெற முடியல. ஆனா, நிறைய பயிற்சி காரணமா இந்த முறை நம்பிக்கையோட நீட் தேர்வு எழுதினேன்.

சங்கவி
சங்கவி
`அவர்கள் பிரச்னைகளை சிறு வயதிலிருந்து பார்க்கிறேன்!' - பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினராகும் லீலாவதி

பல நோய்களால் எங்க கிராம மக்கள் கஷ்டப்படறதை நான் பார்த்திருக்கேன். அதனாலதான் டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். அரசு மருத்துவக் கல்லூரில எனக்கு இடம் கிடைக்கும்னு நம்பறேன்” என்றார்.

தங்கள் கிராமத்தில் இருந்து முதல் தலைமுறை மருத்துவர் கனவு நனவாக வேண்டும் என ரொட்டிகவுன்டனூர் கிராமம் உற்சாகத்தில் உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு