Election bannerElection banner
Published:Updated:

2 குழந்தைகள் மரணம்... தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்! - என்ன நடக்கிறது கோவையில்?

கோவை
கோவை

அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் தடுப்பூசிக்குப் பிறகு உயிரிழந்ததால் கோவை மக்களிடம் பயம் தொற்றிக்கொண்டது.

கோவை, மசக்காளிபாளையம் பகுதியில் பிரசாந்த், விஜயலட்சுமி தம்பதியர் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இவர்களின் இரண்டாவது (மூன்று மாதமேயோன ஆண்) குழந்தைக்கு, அங்கன்வாடி மையத்தில் நடத்தப்பட்ட முகாமில் தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து வீடு திரும்பிய குழந்தை மயக்கம் போட்டிருக்கிறது.

குழந்தை
குழந்தை
கருணாநிதிக்குப் போடப்பட்ட ஊசி... ஜெயலலிதா மரண விசாரணை! - தி.மு.க Vs அ.தி.மு.க #TNElection2021

பதறியடித்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, பிரசாந்த் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கும் பதிவு செய்தனர்.

இதற்கிடையே, சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த வெற்றிமாறன் என்பவரின் இரண்டரை வயது குழந்தைக்கு, மசக்காளிபாளையம் துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அந்தக் குழந்தையும் உடல்நிலைக் குறைபாடு ஏற்பட்டு உயிரிழந்தது.

தடுப்பூசி
தடுப்பூசி

அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் தடுப்பூசிக்குப் பிறகு உயிரிழந்ததால், கோவை மக்களிடம் பயம் தொற்றிக்கொண்டது. இந்தநிலையில், `மூன்று மாத ஆண் குழந்தை உயிரிழந்ததற்கு நிமோனியா காய்ச்சல்தான் காரணம்’ என்று பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ``குழந்தைகள் தடுப்பூசியால் உயிரிழந்தனர் என்று சொல்வது தவறு. இது குறித்து விசாரிக்க, தனி விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வின் முடிவில்தான் உண்மையான காரணம் வெளியாகும்” என்றார்.

குழந்தை
குழந்தை

இதைத் தொடர்ந்து, அந்தச் சுற்றுவட்டாரங்களில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளைக் கண்காணிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தநிலையில், கோவை மாவட்டத்தில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``எங்களின் முதற்கட்ட விசாரணையில் குழந்தைகளின் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை. அதேநேரத்தில், இது குறித்து தனிக்குழு விசாரித்துவருகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகளை நிறுத்திவைத்திருக்கிறோம்.

கோவை
கோவை

இந்தக் காலகட்டத்தில், குழந்தைகள் இறப்புக்கான உண்மையான காரணத்தையும் கண்டறிந்துவிடுவோம். மக்களிடையே ஏற்படும் பயத்தைப் போக்குவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு