கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் ‘வாசு மணல் சப்ளையர்ஸ்’ என்ற பெயரில் ஒரு கடை இயங்கிவருகிறது. கட்டடங்களுக்குத் தேவையான மணல், செங்கல், எம்-சாண்ட், ஜல்லி, சிமென்ட் போன்றவற்றை இங்கு விற்பனை செய்துவருகின்றனர். அந்தக் கடை பெயர்ப் பலகையில்,

‘கடத்தல் மண் எடுத்துத் தரப்படும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ‘இப்படி வெளிப்படையாக மண் கடத்தி விற்கலாமா?’ என்று கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து வாசு மணல் சப்ளையர்ஸ் நிறுவனத்திரைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, ``எங்க ஏரியாவுல ஒரு கட்டடத்தை இடிச்சப்புறம் அங்கே இருக்கற மண்ணை, இன்னொரு இடத்துக்குக் கொண்டு போறதைக் கடத்தல் மண்ணுன்னு சொல்லுவாங்க. மக்களும், ‘ரெண்டு லோடு கடத்தல் மண் எடுத்துட்டு வந்து வீட்டு முன்னாடி போடுங்க’னு சொல்லுவாங்க.

ஆகாத மண், பயன்படுத்தின மண்ணை சேர் ஆகக் கூடாதுனு வீட்டு முன்னாடியும், மாடு கட்டற இடம், பழைய கிணற்றை மூடறதுக்கெல்லாம் போடுவாங்க.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதுக்குப் பேர்தான் கடத்தல் மண். எங்க மாப்பிள்ளைதான் முன்னாடி கடை வெச்சுருந்தார். அவர் கிட்டயிருந்து இப்பத்தான் நாங்கக் கடையை வாங்கினோம். அப்ப இருந்தே இப்படித்தான் வெச்சுருக்கோம். நம்ம ஊர்ல பேச்சு வாக்குல இதைத்தான் கடத்தல் மண்ணுன்னு சொல்லுவாங்க.

இதை யாரோ போட்டோ எடுத்து கடத்தல் பண்றோம்னு போட்டுட்டாங்க. இப்ப இருக்கற சூழ்நிலைல யாராவது போர்டு வெச்சு, நம்பர்லாம் போட்டு மண் கடத்த முடியுமா சார்?" என்றனர்.