நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்து, மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்றுள்ளனர். இந்நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று கோவைக்கு வந்திருந்தார். அப்போது ‘வாலாங்குளம் பகுதியில் படகு சவாரி தொடங்கப்படும்’ என்று அவர் கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து, மாநகராட்சி மண்டல மற்றும் குழுத் தலைவர்கள், அதிகாரிகள் நேற்று மாலை வாலாங்குளம் பகுதியில் ஆய்வுசெய்தனர்.
மத்திய மண்டலத் தலைவர் மீனாலோகு, பணிகள் குழுத் தலைவர் சாந்தி முருகன், நிதிக்குழுத் தலைவர் முபசீரா உள்ளிட்டோர் படகு சவாரி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளுடன் வாலாங்குளத்தில் ஆலோசனை நடத்தினர்.

பிறகு, அவர்கள் அங்கிருந்து புறப்படும்போது பணிக்குழுத் தலைவரும், 63-வது வார்டு கவுன்சிலருமான சாந்தி முருகன் வழுக்கி விழுந்துவிட்டார். இதில் அவரின் கை எலும்பில் முறிவு ஏற்பட்டுவிட்டது.
சாந்தி முருகனுக்கு இன்று அறுவை சிகிச்சை நடக்கிறது. “அதே இடத்தில் இதற்கு முன்பு பலர் விழுந்துள்ளனர். சிறு தடுப்புக்கூட இல்லை. கொஞ்சம் தவறினாலும் நேரடியாகக் குளத்துக்குள்தான் விழ வேண்டும். இதுதான் கோவை ஸ்மார்ட் சிட்டி பணிகளின் உண்மை முகம். அதிகாரிகள் இனியாவது இதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோவை மக்கள் கூறிவருகின்றனர்.