Published:Updated:

9 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டம் செய்யும் பெண்; களத்தில் இறங்கும் விவசாயிகள்! சூடு பறக்கும் கோவை!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி கிருஷ்ணவேணி

கோவை, சோமனூர் அருகே வீட்டுக்கு மேல உயர் மின் கம்பி செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பெண் விவசாயி 9 நாள்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

9 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டம் செய்யும் பெண்; களத்தில் இறங்கும் விவசாயிகள்! சூடு பறக்கும் கோவை!

கோவை, சோமனூர் அருகே வீட்டுக்கு மேல உயர் மின் கம்பி செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பெண் விவசாயி 9 நாள்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Published:Updated:
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி கிருஷ்ணவேணி

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் வழியாக உயர் மின் அழுத்த கம்பிகள் கொண்டு செல்ல பரவலாக எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் அரசூர் முதல் ஈங்கூர் வரை 230 கிலோவாட் உயர் மின் கோபுரம் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர்.

 கிருஷ்ணவேணி வீடு
கிருஷ்ணவேணி வீடு

கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள கோதபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (50) என்ற பெண் விவசாயி. இவருடைய வீட்டின் மேல் உயர் மின் அழுத்த கம்பிகள் கொண்டு செல்ல வேலைகள் நடந்து வருகிறது. இவருடைய விருப்பம் இல்லாமல் வீட்டின் மேலே மின்கம்பி செல்ல பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் கவலையடைந்த அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் முறையிட்டார். பலனில்லாததால் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிருஷ்ணவேணி வீட்டுக்கு மிக அருகிலேயே உயர் மின் கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் பாதையை மாற்றி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கிருஷ்ணவேணி, கடந்த 9 நாள்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கிருஷ்ணவேணி
கிருஷ்ணவேணி

கிருஷ்ணவேணியின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, அதரவாக அவருடைய உறவினர்களும் விவசாயிகளும் களத்தில் இறங்கினர். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணவேணியுடன் அதிகாரிகள் பேச்சுவார்தை நடத்தினர். அவர்கள் நடத்திய தொடர் பேச்சுவார்தை, சமரசமில்லாமல் இல்லாமல் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து கிருஷ்ணவேணிக்கு ஆதரவு தெரிவித்து, விவசாய சங்கங்கள் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கேயும் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

கைது செய்யப்பட்ட விவசாயிகள்
கைது செய்யப்பட்ட விவசாயிகள்

கோபமடைந்த விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். ``கிருஷ்ணவேணியின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்” என விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் கைது செய்த போலீஸார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.