Published:Updated:

`தினமும் 250 நாட்டு நாய்களுக்கு உணவு...!' - ஊரடங்கில் பசியாற்றும் கோவை இளைஞர்

நாய்களுக்கு உணவு
நாய்களுக்கு உணவு

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சாலையில் பசியோடு இருக்கும் நாட்டு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.

அந்திமாலை நேரம்.. மக்கள் கூட்டம் இல்லாத கோவை வ.உ.சி பூங்கா வளாகம் அருகே ஒரு கார் வந்து நிற்கிறது. மாஸ்க் அணிந்தபடி மூன்று இளைஞர்கள் காரில் இருந்து இறங்குகின்றனர். கையில் இருந்த ஒரு பாத்திரத்துடன் அருகில் இருந்த மாநகராட்சி வளாகம் அருகே சென்றனர். அங்கு அவர்களைப் பார்த்தவுடன் நான்கு நாய்க்குட்டிகள் துள்ளிக் குதித்து வெளியே வருகின்றன.

உணவு உண்ணும் நாய்கள்
உணவு உண்ணும் நாய்கள்

நாய்க்குட்டிகள் இளைஞர்களின் கால்களின் அருகிலேயே வால்களை ஆட்டிக்கொண்டு செல்கின்றன. அதில், இருந்த ஓர் இளைஞர் கையில் இருந்த பாத்திரத்தில் சாப்பாடு எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போட்டார். பசியால் வாடிப்போயிருந்த நாய்க்குட்டிகள், அந்தச் சாப்பாட்டை வேகவேகமாக உண்டன. கோவையின் பல பகுதிகளிலும் இந்தக் காட்சியைக் காணலாம்.

ஊரடங்கு உத்தரவு மனிதர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, பிராணிகளின் வாழ்விலும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் விலங்கியல் பூங்கா ஒன்றில் புலி ஒன்றுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களை மட்டுமே நம்பியிருக்கும் நாய், பூனை உள்ளிட்ட பிராணிகள் பசியால் ஆங்காங்கே சோர்ந்து போய்க் கிடக்கின்றன.

நாய்களுக்கு உணவு
நாய்களுக்கு உணவு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீடித்து வருகிறது. தமிழக அரசு மற்றும் தன்னார்வலர்கள் பலர் ஆதரவற்ற...

Posted by Vikatan EMagazine on Monday, April 6, 2020

பல இடங்களில் மனிதர்களுக்குச் சாப்பாடு கிடைப்பதில்லை என்ற புகார் உள்ள நிலையில், பிராணிகளின் நிலை குறித்து யோசிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த ராகுல் என்ற இளைஞர் தினமும் நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கிருக்கும் நாட்டு நாய்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து ராகுல், ``நான் ஆர்.எஸ்.புரம் பகுதியில் செல்லப் பிராணிகள் கடை வைத்துள்ளேன். நம் நாட்டு நாய்கள் எல்லாம், ஹோட்டல்களில் மீதமாகும் உணவுகளை நம்பித்தான் இருக்கின்றன. தற்போது ஊரடங்கால் அதற்கும் வாய்ப்பில்லை. அதனால்தான் நாங்கள் அவற்றுக்கு உணவளித்து வருகிறோம். ஊரடங்கு காலத்தில் மட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டுகளாகவே நாட்டு நாய்களுக்கு தினசரி உணவளித்துக் கொண்டிருக்கிறேன். முன்பு தினசரி எங்கள் பகுதி அருகிலேயே 30 நாய்களுக்கு உணவளிப்பேன். இப்போது, ஊரடங்கு உத்தரவு என்பதால், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தினசரி 250 நாய்களுக்கு உணவளிக்கிறேன்.

உணவு
உணவு

காலை நேரத்தில் சில கடைகள் திறந்திருக்கும். மக்களும் வெளியில் வருவார்கள். இதனால், காலை நேரத்தில் நாய்களுக்கு ஏதாவது கிடைக்கும். மாலை நேரத்தில்தான் அவற்றுக்கு ஏதும் கிடைக்காது. எனவேதான், நாங்கள் மாலை நேரத்தில் அவற்றுக்கு உணவளித்து வருகிறோம். நாய்களுக்கு மட்டுமல்ல, பூனை, குதிரை என்று பசியால் வாடும் அனைத்து உயிர்களுக்கும் நாங்கள் உணவளிப்போம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு