Published:Updated:

பென்சில் முனையில் உலகநாடுகளின் பெயர்கள் - சாதனை படைத்த கோவை இளைஞர்!

பென்சில் முனையில் உலக நாடுகளின் பெயர்
பென்சில் முனையில் உலக நாடுகளின் பெயர்

பென்சில் முனையில் உலகநாடுகள் பெயர்களை பொறித்த கோவை இளைஞரின் பெயர் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளது.

கோவை மணிகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்குமார். சிறு வயதில் இருந்து ஓவியத்தில் ஆர்வம் கொண்ட ஆனந்த், தொழில்முறை ஓவியராகப் பணியாற்றி வருகிறார். வித்தியாசமாக ஏதாவது செய்து சாதிக்க வேண்டும் என்று நினைத்தவருக்கு ஊரடங்கு காலம் கைகூடி வந்துள்ளது.
ஆனந்தகுமார்
ஆனந்தகுமார்

பென்சில் முனையில் உலகநாடுகளின் பெயரை பொறிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஆனந்த். அப்படி 48 நாடுகளின் பெயரை பொறித்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து ஆனந்த்குமார் கூறுகையில், “ஓவியம்தான் எனது முழுநேப்பணி. ஆர்டர் அடிப்படையில் செய்து கொண்டிருக்கிறேன். கடந்தாண்டு ஊரடங்கின்போது, இதேபோல பென்சில் முனையில் அப்துல் கலாமின் உருவத்தை உருவாக்கியிருந்தேன். இந்தாண்டு இன்னும் ஏதாவது வித்தியாசமாகச் செய்யலாம் என்று நினைத்தேன்.

பென்சில் முனையில் உலகநாடுகள் பெயர்
பென்சில் முனையில் உலகநாடுகள் பெயர்

கேரளாவில், ஒருவர் பென்சில் முனையில் உலக நாடுகளின் பெயரை பொறித்துள்ளார். நான் அதையே மைக்ரோ பென்சில் முனையில் (0.7 மிமீ) செய்யலாம் என முடிவெடுத்தேன். இதில் இன்னும் நிறைய சவால்கள் உள்ளன.

கூர்மையான பென்சில் முனையில் எழுத்துகளை பொறிக்க மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். சராசரியாக ஒரு நாட்டின் பெயரைப் பொறிக்க எனக்கு 10 நிமிடங்கள்வரை ஆகும். சில பென்சில் முனைகள் உடைந்துவிட்டன. மொத்தம் 48 ஆசிய நாடுகளின் பெயர்களைப் பொறித்துள்ளேன்.

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை
இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை

இந்தச் சாதனையை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ், பதக்கம் வழங்கி அங்கீகரித்துள்ளனர். இதேபோல வித்தியாசமான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட உள்ளேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு