Published:Updated:

தள்ளுமுள்ளு... காயம்... மூச்சுத் திணறல் - யுவன் சங்கர் ராஜா பங்கேற்ற கல்லூரி நிகழ்ச்சியில் பரபரப்பு

யுவன் சங்கர் ராஜா நிகழ்ச்சி

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்ட கோவை கல்லூரி நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பெண் காவலர் மற்றும் மாணவிகள் காயமடைந்தனர்.

தள்ளுமுள்ளு... காயம்... மூச்சுத் திணறல் - யுவன் சங்கர் ராஜா பங்கேற்ற கல்லூரி நிகழ்ச்சியில் பரபரப்பு

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்ட கோவை கல்லூரி நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பெண் காவலர் மற்றும் மாணவிகள் காயமடைந்தனர்.

Published:Updated:
யுவன் சங்கர் ராஜா நிகழ்ச்சி

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியின் ஆண்டு விழாவை முன்னிட்டு, கல்லூரி மைதானத்தில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன்படி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் குழுவினர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள சுமார் 15,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை அனுமதித்துள்ளனர்.

நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த சுமார் 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைய முயற்சி செய்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஐஸ்வர்யா, நந்தினி, ஹரிணி ஆகிய 3 மாணவிகள் காயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் மூவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகும் சுமார் 1,000 மாணவ, மாணவிகள் உள்ளே நுழைய முயற்சி செய்தனர். அவர்களை போலீஸ் மற்றும் பாதுகாவலர்கள் தடுத்தனர். அப்போது அங்கிருந்த பிளக்ஸ் பேனரை கிழித்தும், சிறு கற்களை வீசியும் பிரச்னை செய்துள்ளனர்.

தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா அந்த வழியாக காரில் சென்றபோது, மாணவர்களும் தள்ளுமுள்ளுடன் உள்ளே நுழைய முயன்றனர். அதில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபருந்த காவல்துறை பெண் சிறப்பு உதவியாளர் ஃபிலோமினா கீழே விழுந்தார். மாணவர்கள் அவரை மிதித்து செல்லவே, பெண் காவலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

கோவை யுவன் சங்கர் ராஜா நிகழ்ச்சி
கோவை யுவன் சங்கர் ராஜா நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியில் மேலும் இரண்டு மாணவர்களும் காயமடைந்தனர். இவ்வளவு கூட்டத்துக்கு தகுந்த முன்னேற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்யாததே விபத்துக்குக் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.