Published:Updated:

மகப்பேறுக்கு தயாரான கர்ப்பிணி ஊழியர்; குட்டி வளைகாப்பு நடத்தி சர்ப்ரைஸ் தந்த அரசு அலுவலக ஊழியர்கள்!

கோவை அரசு அலுவலகம் பெண் கர்ப்பிணி
கோவை அரசு அலுவலகம் பெண் கர்ப்பிணி

கோவை மாவட்டத்தில் மகப்பேறு விடுப்பில் சென்ற ஊழியருக்கு, அவர் பணிபுரிந்த அரசு அலுவலகம் குட்டி வளைகாப்பு நடத்தி சர்ப்ரைஸ் செய்துள்ளது.

கோவை மாவட்டம் எஸ்.எஸ் குளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வரும் சுபஶ்ரீ கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து, மகப்பேறு விடுமுறையில் செல்ல ஆயத்தமான சுபஶ்ரீக்கு, அந்த அலுவலகத்தில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களான அனிதா, தனலட்சுமி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

கோவை அரசு அலுவலகம் கர்ப்பிணி
கோவை அரசு அலுவலகம் கர்ப்பிணி
கோவை சுற்றுலா பகுதிகளுக்கு அனுமதி! செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

சுபஶ்ரீக்கு பூ, இனிப்பு, பழம் ஆகியவற்றை கொடுத்து, வளையல் அணிவித்து, பொட்டு வைத்து குட்டி வளைகாப்பு நடத்தி மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து கோவை உதவி ஆட்சியர் சரண்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ``அரசு அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியர் மகப்பேறு விடுமுறைக்காக அன்பு மற்றும் ஆசீர்வாதத்துடன் வீட்டுக்கு வழியனுப்பி வைக்கப்பட்டார்.

அரசு அலுவலகம் பெண் ஊழியர்
அரசு அலுவலகம் பெண் ஊழியர்
வீட்டு பெயர் பலகையில் மகள், மருமகளுக்கும் இடம்; மகாராஷ்டிரா கிராம மக்களின் புது முயற்சி!

இது தலைமைத்துவத்தில் பெண்கள் கொண்டு வரக்கூடிய மாற்றம். 3 பெண்கள் இணைந்தால் அந்த இடம் பேரழகாக மாறிவிடும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த விஷயத்தை சமூகவலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து உதவி ஆட்சியர் சரண்யாவிடம் பேசினோம். ``நான் அங்கு எதேச்சையாக சென்றிருந்தபோது, அவர்கள் இந்த ஏற்பாட்டை செய்திருந்தது தெரியவந்தது. இது முழுக்க முழுக்க அவர்களின் முன்னெடுப்புதான். பொதுவாக, பெண்களுக்கு மகப்பேறு விடுமுறையை அனுமதிக்காத நிறுவனங்கள் அதிகம் உள்ளன. அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்பது போன்ற பார்வைகளும் உள்ளன.

உதவி ஆட்சியர் சரண்யா
உதவி ஆட்சியர் சரண்யா

இது எனக்குமே புது அனுபவமாக இருந்தது. அரசு அலுவலகத்தில் இருக்கும் பெண்கள், தங்களுடன் பணியாற்றும் சக பெண்களை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது சந்தோஷமான விஷயம். அந்தப் பெண்ணும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கிளம்பினார்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு