Published:Updated:

மனு கொடுத்த 10 நிமிடங்களில் இலவச வீடு - மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் தாயை நெகிழவைத்த ஆட்சியர்

உதவி

'வாழவே வழியில்லை. குடியிருக்கவும் வீடில்லை' என்று தனது மாற்றுத்திறனாளிக் குழந்தைகளோடு வந்து கண்ணீரோடு மனு கொடுத்த பெண்ணுக்கு, பத்து நிமிடங்களில் இலவச வீடு ஒதுக்கி, கரூர் மாவட்ட ஆட்சியர் அந்தப் பெண்ணை நெகிழவைத்திருக்கிறார்.

மனு கொடுத்த 10 நிமிடங்களில் இலவச வீடு - மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் தாயை நெகிழவைத்த ஆட்சியர்

'வாழவே வழியில்லை. குடியிருக்கவும் வீடில்லை' என்று தனது மாற்றுத்திறனாளிக் குழந்தைகளோடு வந்து கண்ணீரோடு மனு கொடுத்த பெண்ணுக்கு, பத்து நிமிடங்களில் இலவச வீடு ஒதுக்கி, கரூர் மாவட்ட ஆட்சியர் அந்தப் பெண்ணை நெகிழவைத்திருக்கிறார்.

Published:Updated:
உதவி

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை விரிவாகக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மக்களின் கோரிக்கைகள் குறித்து அதிகபட்சமாக ஒரு வார காலத்துக்குள் நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ள மனுக்கள் மீது எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க இயலுமோ அவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், மனவளர்ச்சி குன்றிய இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு வாடகை வீட்டில் குடியிருந்து சிரமப்படுவதாக, கரூர் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த கணவரின் ஆதரவற்ற நிலையிலுள்ள மகாலெட்சுமி என்பவர் மனு கொடுத்தார். 'எனக்கு வாழவும் வழியில்லை. குடியிருக்கவும் வீடில்லை. இரண்டு குழந்தைகளும் பிரச்னையோடு இருக்காங்க. அவங்க மருத்துவச் செலவுக்கும் என்னால பொருளாதாரத்தை திரட்ட முடியலை. இதுல, வாடகை வீட்டுல குடியிருப்பதால, வாடகை கொடுக்க முடியாம சிரமப்படுறேன்' என்று கண்ணீரோடு தெரிவித்தார்.

உதவி
உதவி

அந்தப் பெண்ணின் நிர்கதியான நிலையை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், பத்து நிமிடங்களில் நடவடிக்கை மேற்கொண்டு, சணபிரட்டி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் ரூ.1.88 லட்சம் மதிப்பிலான வீட்டை ஒதுக்கி, அதற்கான உத்தரவைக் கொடுத்ததோடு, 'இதில் பயனாளியின் பங்களிப்புத் தொகை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செலுத்தப்படும்' என்று தெரிவித்தார். நடப்பவை உண்மைதானா என்று இன்ப அதிர்ச்சியில் இருந்த மகாலட்சுமி,

"என் கணவர் என்னைவிட்டு பிரிந்து போய்விட்டார். மாற்றுத்திறனாளி பிள்ளைகளைவெச்சுக்கிட்டு, வாடகை வீட்டிலிருந்து ரொம்ப சிரமப்பட்டேன். குழந்தைகளின் மருத்துவச் செலவை சமாளிக்க முடியலை. அதனால், மாவட்ட நிர்வாகத்திடம் ஏதாவது உதவி கேட்கலாம்னு இங்கே வந்தேன். ஆனா, எனக்கு இலவசமா வீடு கொடுத்திருக்கிறார். இனி, எப்படியாவது என் பிள்ளைகளை வளர்ப்பேன். இந்த உதவியை என் காலத்துக்கும் மறக்க மாட்டேன்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism