Published:Updated:

` மதச்சாயம் பூசி, வீண்பழி சுமத்துகின்றனர்!' - கலங்கும் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

`ஊட்டியில் நடந்த மதபோதகர் பிரச்னையில என்னைச் சம்பந்தப்படுத்தி வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்' - நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

 J.Innocent Divya [the nilgiris district collector]
J.Innocent Divya [the nilgiris district collector] ( Arun.K )

நீலகிரி மாவட்டதின் 113-வது ஆட்சியராகவும், 5-வது பெண் ஆட்சியராகவும் கடந்த 2017 ஜூன் மாதம் பொறுப்பேற்றவர் ஜே.இன்னசென்ட் திவ்யா. மலை மாவட்டமான நீலகிரியில் வாழும் பழங்குடி இன மக்கள், படுகர்கள், தோட்டத் தொழிலாளர்கள் எனப் பல்வேறு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும், சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாவட்டத்தில் இயற்கையைச் சூறையாடும் வகையில் நடைபெற்றுவந்த பல நடவடிக்கைகளைத் தடுத்தார். யானை வழித்தட மீட்பு, ஆழ்துளைக் கிணறு அமைக்கத் தடை, பிளாஸ்டிக்கை ஒழிக்க கடுமையான தொடர் நடவடிக்கைகள், விதி மீறிக் கட்டப்படும் கட்டடங்களுக்குச் சீல் வைப்பு எனப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துப் பின்பற்றியும் வருகிறார் இன்னசென்ட்.

 J.Innocent Divya [the nilgiris district collector]
J.Innocent Divya [the nilgiris district collector]

இந்த நிலையில் கடந்த வாரம் ஊட்டியில் நடைபெற்ற சம்பவம் ஒன்றில் ஆட்சியருக்குத் தொடர்பு இருப்பதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. ஊட்டி பாம்பே கேசில் பகுதியில் கிறிஸ்துவ மத பிரசாரம் செய்ததாகக் கூறி கணவன், மனைவியைச் சிலர் கட்டாயமாக விபூதி பூசச் செய்தனர். அப்போது கலெக்டரிடம் அனுமதி பெற்றுள்ளோம் எனச் சம்பந்தப்பட்ட மதபோதகர்கள் தெரிவித்தனர். இதனால் கலெக்டர் மீது தவறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தன் மீது தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

Vikatan

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, “சமீபத்தில் ஊட்டியில் நடந்த மதபோதகர் பிரச்னையில என்னைச் சம்பந்தப்படுத்தி வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். இது தொடர்பாகச் சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 J.Innocent Divya [the nilgiris district collector]
J.Innocent Divya [the nilgiris district collector]

தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் மீதோ, கலெக்டர் மீதோ தவறான கருத்துகளை யாரேனும் பதிவு செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகம் மற்றும் கலெக்டர் மீது சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்மையான முறையில் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை ஆற்றிவருகிறேன். யாருடைய தலையீட்டையும் பொருட்படுத்தாது பணியாற்றும் என் மீது மதச் சாயத்தைப் பூசப் பார்க்கிறார்கள். நான் அப்படிப்பட்டவர் அல்ல'' எனத் உருக்கத்துடன் பேசி முடித்தார்.