Published:Updated:

யானைகள் வழித்தடத்தில் தடை செய்யப்பட்ட காட்டேஜ் இயங்குகின்றனவா? விசாரணைக்குழுவினர் ஆய்வு!

யானைகள் வழித்தடம் ஆய்வு

சீல் வைக்கப்பட்ட சில காட்டேஜ் கட்டடங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் வணிக ரீதியாகப் பயன்படுத்துகிறார்களா அல்லது அவர்களது உபயோகத்துக்கு பயன்படுத்துகிறார்களா என்பது குறித்தும் விசாரித்து பதிவு செய்யப்பட்டது.

யானைகள் வழித்தடத்தில் தடை செய்யப்பட்ட காட்டேஜ் இயங்குகின்றனவா? விசாரணைக்குழுவினர் ஆய்வு!

சீல் வைக்கப்பட்ட சில காட்டேஜ் கட்டடங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் வணிக ரீதியாகப் பயன்படுத்துகிறார்களா அல்லது அவர்களது உபயோகத்துக்கு பயன்படுத்துகிறார்களா என்பது குறித்தும் விசாரித்து பதிவு செய்யப்பட்டது.

Published:Updated:
யானைகள் வழித்தடம் ஆய்வு

முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை உள்ளடக்கிய சீகூர் பீடபூமி ஆசிய யானைகளின் வழிடத்தில் மிக முக்கியமான பகுதியாக ஆய்வாளர்களால் அறியப்படுகிறது. இந்தப் பகுதிகளில் இருக்கும் யானைகள் பயன்படுத்தி வரும் வலசைப் பாதைகள் மிகப் பழைமையான யானைகள் வழித்தடமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநில வனங்களைக் கடக்கும் யானைக் கூட்டங்களின் இடப்பெயர்வுக்கு இந்த சீகூர் பீடபூமி யானைகள் வழித்தடம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.

யானைகள் வழித்தடம் ஆய்வு
யானைகள் வழித்தடம் ஆய்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் யானைகள் வழித்தடத்தில் அனுமதியற்ற தங்கும் விடுதிகள், விதிமீறிய கட்டடங்கள், உணவகங்கள் போன்றவை அதிகரித்திருப்பதால் யானைகள் வலசைப்பாதைகள் தடைபட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் நீலகிரி மாவட்டம், முதுலைப் புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டத்தில் உள்ள சீகூர் யானைகள் வழித்தடம் தொடர்பாக 2010-ம் ஆண்டு வரைபடத்துடன்கூடிய அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து தங்கும் விடுதி உரிமையாளர்கள் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சீகூர் யானைகள் வழித்தடம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மசினகுடி, பொக்காபுரம், வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 309 அறைகள் கொண்ட 39 கட்டடங்கள் யானைகள் வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிக்கையை சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்த கட்டடங்களுக்கு சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 309 அறைகள் கொண்ட 39 கட்டடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

யானைகள் வழித்தடம் ஆய்வு
யானைகள் வழித்தடம் ஆய்வு

பொதுமக்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள் தங்கள் தரப்பு ஆட்சேபனைகளைத் தெரிவிக்கும் வகையில் 14.10.2020 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், சீகூர் யானைகள் வழித்தட விவகாரத்தை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கடராமன் தலைமையில் பிரவீன் பார்கவா, நந்திதா ஹாசரிக்கா அடங்கிய மூன்று நபர் விசாரணைக் குழு ஒன்றையும் அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆட்சேபனைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து 200-க்கும்‌ மேற்பட்டோர் ஆய்வுக்குழுவிடம் மனுக்களை வழங்கினர். இதில் பெரும்பாலானோர் தங்கும் விடுதி உரிமையாளர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், சீகூர் யானைகள் வழித்தட ஆய்வுக்குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன், நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆட்சேபனை மனு அளித்திருந்த பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன்
ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன்

இந்த ஆய்வு குறித்து பேசிய யானைகள் வழித்தட ஆய்வுக் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன், ``யானைகள் வழித்தடத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் கடந்த இரண்டு நாள்களாக ஆய்வு மேற்கொண்டோம். சீல் வைக்கப்பட்ட சில காட்டேஜ் கட்டடங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் வணிக ரீதியாகப் பயன்படுத்துகிறார்களா அல்லது அவர்களது உபயோகத்துக்குப் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்தும் விசாரித்து பதிவு செய்யப்பட்டது. யானைகள் வாழிடத்தில் தடையை மீறி தடுப்பு வேலிகள் மற்றும் மின்வேலிகள் அமைக்கப்பட்டிருப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அவை அகற்றப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism