Published:Updated:

`போலீஸார், சுகாதாரப் பணியாளர்கள், ஆதரவற்றோருக்காக சமுதாய உணவுக்கூடங்கள்!’ - அசத்தும் தேனி

சமுதாய பொது உணவுக் கூடம்

சமுதாய பொது உணவுக்கூடத்தால், ஒரே நாளில் 4,407 பேர் பயன்!

`போலீஸார், சுகாதாரப் பணியாளர்கள், ஆதரவற்றோருக்காக சமுதாய உணவுக்கூடங்கள்!’ - அசத்தும் தேனி

சமுதாய பொது உணவுக்கூடத்தால், ஒரே நாளில் 4,407 பேர் பயன்!

Published:Updated:
சமுதாய பொது உணவுக் கூடம்

கொரோனா அச்சம் காரணமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, பாதுகாப்புப் பணி, சுகாதாரப்பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் உணவு அருந்தும் விதமாக, மாவட்டத்தில் சமுதாய பொது உணவுக் கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இது வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமுதாய பொது உணவுக் கூடம்
சமுதாய பொது உணவுக் கூடம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 20 அரசுப் பள்ளிகள், 6 நகராட்சிகளில் உள்ள அம்மா உணவகங்கள், 22 பேரூராட்சிகளில் உள்ள சமுதாயக் கூடங்கள் என 50 இடங்கள், சமுதாய பொது உணவுக் கூடங்களாக அறிவிக்கப்பட்டு, நேற்று முதல் உணவு வழங்கப்பட்டுவருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சாலையோர ஆதரவற்றோர்கள் ஆகியோருக்காக இந்த சமுதாய பொது உணவுக் கூடம் திறக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில், மதிய உணவு சாப்பிட்டவர்கள் என எடுத்துக்கொண்டால் 4,407 நபர்களுக்கு சமுதாய பொது உணவுக் கூடம் மூலமாக உணவு கொடுக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சமுதாய பொது உணவுக் கூடம்
சமுதாய பொது உணவுக் கூடம்

இதே போல, அரசுப் பணியாளர்கள் பயணிக்க குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பணிக்கு வரும், அரசுப் பணியாளர்கள் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism