Election bannerElection banner
Published:Updated:

கொலை மிரட்டல் விடுத்த காடுவெட்டி குரு மகன் கனலரசன்?! - வன்னியர் சங்கத்தின் துணைத் தலைவர் புகார்

காடுவெட்டி குரு மகன் கனலரசன்
காடுவெட்டி குரு மகன் கனலரசன்

காடுவெட்டி குரு மகன் கனலரசன் மற்றும் நான்கு பேர் கையில் அரிவாளோடு வெளியே வந்தனர். வேகமாக எங்களை நோக்கி வந்தவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு `எல்லாரையும் வெட்டுங்கடா’ எனவும் மிரட்டினார்.

வன்னியர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், கொலை மிரட்டல் விடுத்ததாக வன்னியர் சங்கத்தின் தற்போதையை மாநில துணைத் தலைவர் ஸ்டாலின், கும்பகோணம் போலீஸில் புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ம.க.ஸ்டாலின்
ம.க.ஸ்டாலின்

பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது நடைபெற்ற பிரச்னையின் காரணமாக, மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

வன்னியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின் அளித்திருக்கும் புகார் மனுவில், ``நான் கடந்த 26-ம் தேதி கும்பகோணம் கர்ணக்கொல்லை தெருவிலுள்ள வன்னியர் சங்கக் கட்டடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

`தி.மு.க-வை வெறுத்தவர் காடுவெட்டி குரு; உதயநிதிக்கு திடீர் அக்கறை ஏன்?’ - கொதிக்கும் பா.ம.க

அப்போது எனது கார் நிறுத்தியிருந்த பகுதியிலிருந்து சத்தம் கேட்டது. இதையடுத்து நானும் பா.ம.க-வின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெங்கட்ராமனும் சம்பவ இடத்துக்கு ஓடிச் சென்று பார்த்தோம். அப்போது கர்ணக்கொல்லை தெருவைச் சேர்ந்த கருணாகரன் மகன் சிவா, முரளி மற்றும் சிலர் எனது கார் டிரைவர் ராஜ்குமாரை கட்டை மற்றும் இரும்புக்கம்பியால் தாக்கிக்கொண்டிருந்தனர்.

நாங்கள், `விடுங்க எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்’ என விலக்கிவிட்டோம். அப்போது அதே பகுதியிலிருந்த ஒரு வீட்டுக்குள்ளேயிருந்து காடுவெட்டி குரு மகன் கனலரசன் மற்றும் நான்கு பேர் கையில் அரிவாளோடு வெளியே வந்தனர். வேகமாக எங்களை நோக்கி வந்தவர்கள் தகாத வார்த்தைளால் திட்டியதோடு `எல்லோரையும் வெட்டுங்கடா’ எனவும் மிரட்டினார்.

கனலரசன் மீது புகார் புகார்
கனலரசன் மீது புகார் புகார்

உடனடியாக நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்துவிட்டேன். எனவே எங்கள் தரப்பினரைத் தாக்கியவர்கள் மீதும், கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீதும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு