Published:Updated:

திருப்பூர்: 50 கோடி மதிப்புள்ள நீர்நிலை புறம்போக்கு நிலத்தை 1.5 கோடிக்கு விற்பனை செய்த அவலம்!

நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கம்

நஞ்சராயன் குளக்கரையில் தனியார் பள்ளிக்கு அரசு நிலத்தை விற்பனை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. குளத்தின் நீர் வழிப்பாதையை மறித்து தனியார் கல்வி நிறுவனம் கட்டுமானங்களை கட்டி வருகிறது. இதனால் நஞ்சராயன் குளத்தின் உயிர் சூழல் கேள்விக்குள்ளானது.

திருப்பூர்: 50 கோடி மதிப்புள்ள நீர்நிலை புறம்போக்கு நிலத்தை 1.5 கோடிக்கு விற்பனை செய்த அவலம்!

நஞ்சராயன் குளக்கரையில் தனியார் பள்ளிக்கு அரசு நிலத்தை விற்பனை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. குளத்தின் நீர் வழிப்பாதையை மறித்து தனியார் கல்வி நிறுவனம் கட்டுமானங்களை கட்டி வருகிறது. இதனால் நஞ்சராயன் குளத்தின் உயிர் சூழல் கேள்விக்குள்ளானது.

Published:Updated:
நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கம்

திருப்பூர் ஊத்துக்குளி அருகே 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு இந்தக் குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது.

நஞ்சராயன் குளம்
நஞ்சராயன் குளம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

181 வகை பறவைகள், 40 வகை பட்டாம்பூச்சிகள், 76 வகை தாவரங்கள், 11 வகை நீர் வாழ் உயிரினங்கள், 16 வகை பூச்சி இனங்களின் வாழ்விடமாக நஞ்சராயன் குளம் இருந்து வருகிறது. இதனால், இந்தக் குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வரவேற்பு கிடைத்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், நஞ்சராயன் குளத்தின் சுற்றுச்சூழல் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சுற்றியுள்ள சாயப்பட்டறை ஆலைகள் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக குளத்தில் கலந்துகொண்டிருக்கிறது. கழிவு நீரைச் சுத்திகரிக்க அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு மையம் செயல்படாமல் கேட்பாரற்று கிடக்கிறது.

நஞ்சராயன் குளம்
நஞ்சராயன் குளம்

மறுபக்கம் குளத்தின் நீர் வழிப்பாதையை மறித்து ஓர் தனியார் கல்வி நிறுவனம் கட்டுமானங்களைக் கட்டி வருகிறது. இதனால் நஞ்சராயன் குளத்தின் உயிர் சூழல் கேள்விக்குள்ளானது.

இந்நிலையில், இந்தக் குளத்தை மீட்டெடுக்கும் விதமாக நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. சமீபத்தில் முதல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியவர்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு நிலம் விற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக மனு அளித்துள்ளனர்.

நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கம்
நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கம்

இதுகுறித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் நம்மிடம் கூறுகையில், ``குளத்தின் கரையில் இருந்த 9 ஏக்கர் அரசு நிலத்தை, தனியார் பள்ளி அறக்கட்டளைக்கு ரூ.1.5 கோடிக்கு கொடுத்துள்ளனர்.

அந்த இடத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.70 கோடி. விற்றபோது அதன் மதிப்பு ரூ.50 கோடி. இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கிறது. தண்ணீர் செல்லும் இடத்தை மறித்து கட்டுமானங்களைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். எந்த ஆட்சி வந்தாலும், அந்தப் பள்ளி நிர்வாகத்துக்கு துணையாக இருக்கின்றனர்.

நஞ்சராயன் குளம்
நஞ்சராயன் குளம்

இதுகுறித்து விசாரித்து அரசு நிலம் விற்பனை செய்ததை ரத்து செய்து நிலத்தை மீட்க வேண்டும். நிலத்தை முறைகேடாக விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.