Published:Updated:

அடிப்படை வசதிகள்கூட இல்லை... இருளில் மூழ்கியிருக்கும் கோவளம் பேருந்து நிறுத்தம் - விடிவு எப்போது?!

கோவளம் பேருந்து நிறுத்தம்

கோவளத்தில் பயணிகள் நிற்கும் பேருந்து நிறுத்தம் பாழடைந்த நிலையில் இருக்கிறது. கோவளத்திலிருந்து சென்னைக்கும் மற்றும் புறநகருக்கும் செல்லக்கூடிய பேருந்து நிறுத்தம், மிக மோசமான நிலையில் பழுதடைந்து காணப்படுகிறது.

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று போக்குவரத்து வசதி இருக்கிறது. எனினும், சில இடங்களில் பேருந்து நிறுத்தங்களில் அல்லது நிலையங்களில் அடிப்படை வசதிகூட இல்லாத நிலையும் இருக்கிறது.

அடிப்படை வசதிகள்கூட இல்லை... இருளில் மூழ்கியிருக்கும்  கோவளம் பேருந்து நிறுத்தம் - விடிவு எப்போது?!

ஒரு நாளைக்கு பல்லாயிரம் சுற்றுலாப்பயணிகள் கோவளம் பகுதிக்கு வருகை தருவது வழக்கம். குறிப்பாக வார இறுதியில் சுற்றுலாப்பயணிகளும், பொதுமக்களும் படையெடுப்பார்கள். மேலும் கோவளம் பகுதியில் பிரபலமான மசூதி ஒன்றும் இருக்கிறது. இதனால் இங்கு இஸ்லாமிய பக்தர்களும் வந்து செல்வார்கள்.

அடிப்படை வசதிகள்கூட இல்லை... இருளில் மூழ்கியிருக்கும்  கோவளம் பேருந்து நிறுத்தம் - விடிவு எப்போது?!

இப்படியான கோவளத்தில் பேருந்து நிறுத்தம் பாழடைந்த நிலையில் இருக்கிறது. கோவளத்திலிருந்து சென்னைக்கும் மற்றும் புறநகருக்கும் செல்லக்கூடிய பேருந்து நிறுத்தம், மிக மோசமான நிலையில் பழுதடைந்து காணப்படுகிறது. 50 முதல் 100 பேருந்துகள் தினமும் கடந்து செல்லும் இந்தப் பேருந்து நிறுத்தத்திலிருந்து தாம்பரம், கோயம்பேடு, பிராட்வே, தியாகராயநகர் என சென்னையின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்துகள் வந்து செல்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் இந்தப் பேருந்து நிறுத்தத்திலோ அடிப்படை வசதியான மின்விளக்கோ, இருக்கைகளோ இல்லை. துருப்பிடித்த நிலையில் ஆறு கம்பிகளுடன், ஒரு கால் உடைந்த இரும்பு மேசை மற்றும் கோவளம் என்ற பெயர்ப்பலகையும் மேற்கூரையையும் தாங்கி பாழடைந்த நிலையில் கோவளம் பேருந்து நிறுத்தம் இருக்கிறது. இது எந்த அளவு பாழடைந்துள்ளது என்று குறிப்பிட வேண்டுமென்றால் அந்த பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஓர் இரும்புத்தூண் மண்ணிலிருந்து உடைந்து அந்தரத்தில் நிற்கும் நிலையில் இருக்கிறது. அந்தக் கம்பியைப் பிடித்து நின்றால். அந்த முழுப் பேருந்து நிறுத்தமும் ஆடும்.

அடிப்படை வசதிகள்கூட இல்லை... இருளில் மூழ்கியிருக்கும்  கோவளம் பேருந்து நிறுத்தம் - விடிவு எப்போது?!

இது குறித்து அந்தப் பகுதியில் தினம் தினம் பயணம் செய்யும் பயணிகளிடம் கேட்டபோது, ``பல நாள்களாக இந்தப் பேருந்து நிறுத்தம் இப்படித்தான் இருக்கிறது. சில நேரங்களில் இந்தப் பேருந்து நிறுத்தத்தின் உடைந்த பகுதியிருந்து விஷப்பூச்சிகள் வருகின்றன” என வேதனை தெரிவித்தனர்.

அடிப்படை வசதிகள்கூட இல்லை... இருளில் மூழ்கியிருக்கும்  கோவளம் பேருந்து நிறுத்தம் - விடிவு எப்போது?!

மழைக் காலம் நெருங்குவதால், அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன்னரே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. அரசு செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.