Published:Updated:

துருப்பிடித்த துப்பாக்கி, 7 தோட்டாக்கள்! - கோவை விமான நிலையத்தைப் பதறவைத்த கேரள காங்கிரஸ் நிர்வாகி

துருப்பிடித்த துப்பாக்கி... 7 தோட்டாக்கள்!
News
துருப்பிடித்த துப்பாக்கி... 7 தோட்டாக்கள்!

கோவை விமான நிலையத்துக்குத் துருப்பிடித்த துப்பாக்கியுடன் வந்த கேரள காங்கிரஸ் பிரமுகரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. முதல் கட்ட தகவலின்படி, அவர் பெங்களூரு மார்க்கமாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்ல முயன்றது தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி பகுதியைச் சேர்ந்தவர் கே.எஸ்.பி.ஏ தங்கல் (60). இவர் பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவராக இருக்கிறார். பெங்களூரு செல்வதற்காக இன்று காலை கோவை விமான நிலையம் வந்திருக்கிறார்.

தங்கல்
தங்கல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அவர் உடைமைகளை சோதனையிட்டதில், துருப்பிடித்த பழைய துப்பாக்கி ஒன்றும், ஏழு தோட்டாக்களும் கண்டறியப்பட்டன.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவரிடம் துப்பாக்கி அனுமதி தொடர்பாக எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பீளமேடு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

துப்பாக்கி, தோட்டாக்கள்
துப்பாக்கி, தோட்டாக்கள்

முதற்கட்ட தகவலின்படி, தங்கல், பெங்களூரு மார்க்கமாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்ல முயன்றது தெரியவந்துள்ளது. வரும் அவசரத்தில் துப்பாக்கி எடுத்து வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தங்கல், பழைய துப்பாக்கியுடன் பிடிபட்ட தகவல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கோவை பாஜக-வினர் பீளமேடு காவல் நிலையம் முன்பு குவிந்தனர். ``இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.

பாஜக
போலீஸ் வாக்குவாதம்
பாஜக போலீஸ் வாக்குவாதம்

எனவே, தங்கல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாஜக-வினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.