Published:Updated:

போகும்போது ரூ.7, வரும்போது ரூ.11; அத்துமீறிய அரசு போக்குவரத்து கழகம்; அதிரடித்த நுகர்வோர் நீதிமன்றம்

அரசு போக்குவரத்து கழகம்

``பேருந்து நடத்துனர் வசூலித்த கூடுதல் தொகையை பயணி மனோகரனுக்கு திரும்ப வழங்கவேண்டும். நுகர்வோருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10,000 அரசுப் போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும்." - நுகர்வோர் நீதிமன்றம்

போகும்போது ரூ.7, வரும்போது ரூ.11; அத்துமீறிய அரசு போக்குவரத்து கழகம்; அதிரடித்த நுகர்வோர் நீதிமன்றம்

``பேருந்து நடத்துனர் வசூலித்த கூடுதல் தொகையை பயணி மனோகரனுக்கு திரும்ப வழங்கவேண்டும். நுகர்வோருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10,000 அரசுப் போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும்." - நுகர்வோர் நீதிமன்றம்

Published:Updated:
அரசு போக்குவரத்து கழகம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகிலுள்ள கோடேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்‌. ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியரான இவர், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவராக தற்போது இருந்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு மஞ்சூரிலிருந்து கீழ்குந்தா கிராமத்துக்கு அரசுப் பேருந்தில் பயணத்திருக்கிறார். 7 ரூபாய் கட்டணம் வசூலித்திருக்கின்றனர். கீழ்குந்தாவிலிருந்து அதே பேருந்தில் மீண்டும் மஞ்சூருக்கு பயணித்திருக்கிறார். அப்போது 11 ரூபாய் கட்டணம் வசூலித்திருக்கின்றனர். `ஒரே பேருந்து ஒரே வழித்தடத்தில் ஏன் இந்தக் கட்டண உயர்வு?' என நடத்துனரிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். அவரிடமிருந்து முறையான பதில் கிடைக்காததால் ஊட்டியிலுள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருக்கிறார். இது குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் சித்ரா அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

அரசுப் பேருந்து
அரசுப் பேருந்து

``பேருந்து நடத்துனர் வசூலித்த கூடுதல் தொகையை பயணி மனோகரனுக்கு திரும்ப வழங்கவேண்டும். நுகர்வோருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10,000 அரசுப் போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும். வழக்கு செலவாக 3,000 ரூபாயை போக்குவரத்து கழக மேலாளர் வழங்க வேண்டும். வழக்கு தொடுத்த மனோகரன் கோரிக்கைப்படி, பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட 19-1-2019 முதல் இன்று வரை சாதாரண பேருந்தில் பயணிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையைக் கணக்கிட்டு மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். இந்த தொகை மாவட்ட மக்களிடையே நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும். இழப்பீட்டு தொகையை இரண்டு மாதங்களுக்குள் வழங்கவில்லை என்றால் 12% வட்டியுடன் வழங்க வேண்டும்" என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அதிரடி தீர்ப்பு குறித்து நம்மிடம் பேசிய மனோகரன், ``நீலகிரி மாவட்ட மக்கள் முழுக்க முழுக்க அரசுப் பேருந்துகளை மட்டுமே நம்பியிருக்கின்றனர். சமவெளி பகுதிகளைக் காட்டிலும் மலை மாவட்டத்தில் 20% கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

மனோகரன், நீதிபதி சித்ரா
மனோகரன், நீதிபதி சித்ரா

சாதாரண பேருந்துகளை விரைவு பேருந்து என்ற பெயரில் கூடுதலாக கட்டணம் வசூலித்து வருகின்றனர். அரசுப் போக்குவரத்து கழகம் மக்களை நேரடியாக சுரண்டி வருகிறது" என்றார்.