Published:Updated:

தொடர்மழை: கொடைக்கானல் ​​அடுக்கம்​ சாலை சரிந்தது; போக்குவரத்து துண்டிப்பால் மக்கள் அவதி

நிலச்சரிவு

கொடைக்கானலில் தொடர்மழை காரணமாக மலைப்பகுதியில் ஈரப்பதம் அதிகரித்து ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுவருகிறது. சுற்றுலாப்பயணிகளின் வருகை, சரக்கு உள்ளிட்ட வாகனப் போக்குவரத்தும் குறைவாக இருக்கிறது. 

தொடர்மழை: கொடைக்கானல் ​​அடுக்கம்​ சாலை சரிந்தது; போக்குவரத்து துண்டிப்பால் மக்கள் அவதி

கொடைக்கானலில் தொடர்மழை காரணமாக மலைப்பகுதியில் ஈரப்பதம் அதிகரித்து ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுவருகிறது. சுற்றுலாப்பயணிகளின் வருகை, சரக்கு உள்ளிட்ட வாகனப் போக்குவரத்தும் குறைவாக இருக்கிறது. 

Published:Updated:
நிலச்சரிவு

பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சிமலையை ஒட்டிய பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருந்துவருகிறது.

போக்குவரத்து துண்டிப்பு
போக்குவரத்து துண்டிப்பு

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு முதல் விட்டுவிட்டு ம‌ழை ம‌ற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்துவருகிறது. இதனால் மலைப்பகுதியில் ஈரப்பதம் அதிகரித்து, ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுவருகிறது. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்து, கொடை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. சரக்கு உள்ளிட்ட வாகனப் போக்குவரத்தும் குறைவாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் கொடைக்கானல் அடுக்கம் கும்ப‌க்க‌ரை வழியாக பெரியகுளம் செல்லும் மலைச்சாலையில், நேற்று அதிகாலை திடீர் மண்சரிவு ஏற்பட்டிருக்கிரது. குறிப்பாக குருடிகாடு என்னும் இடத்தில் க‌ட‌ந்த‌ ஒராண்டுக்கு முன்பாக‌ சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு சாலையின் நடுவே பிளவு ஏற்பட்டு, சாலை சீர‌மைக்க‌ப்ப‌ட்ட நிலையில் அந்தப் பகுதியில் மீண்டும் மூன்று இட‌ங்க‌ளில் தற்போது ம‌ண்ச‌ரிவு ஏற்ப‌ட்டு சாலை சரிந்து முற்றிலும் போக்குவரத்துத் தடை ஏற்பட்டிருக்கிறது.

சாலை சேதம்
சாலை சேதம்

இத‌னால் தற்காலிகமாக இருச‌க்க‌ர‌ வாக‌ன‌ம் முத‌ல் நான்கு ச‌க்கர‌ வாக‌ன‌ம் வ‌ரை இந்த‌ப் ப‌குதியில் செல்வ‌த‌ற்கு நெடுஞ்சாலைத்துறையின‌ரால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த‌ ம‌ண்ச‌ரிவைச் சீர‌மைக்கும் ப‌ணியில் இரண்டு ஜேசிபி வாக‌ன‌ங்க‌ளும், ப‌த்துகும் மேற்ப‌ட்ட‌ நெடுஞ்சாலைத்துறை ப‌ணியாள‌ர்க‌ளும் தீவிர‌மாக‌ ஈடுப‌ட்டுவ‌ருகின்ற‌னர். இதைத் ​​தொட‌ர்ந்து இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள‌ அடுக்க‌ம், பால‌ம‌லை, சாம்ப‌க்காடு ம‌லைக்கிராம‌ மக்கள் இந்த‌ச் சாலையைக் கடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுவருகின்றனர். இங்கு விளைவிக்கக்கூடிய விவசாயப் பொருள்களை ச‌ந்தைப்ப‌டுத்த‌ இந்த‌ வ‌ழியே எடுத்துச் செல்ல முடியாமல் பொருள்கள் தேக்கமடைந்தும், வீணாகியும்வருகின்ரன.

நிலச்சரிவு
நிலச்சரிவு

பெரியகுளம்-அடுக்கம் சாலை போடப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு சாலை சேதமடைந்துவருகிறது. சாலையை ஒட்டி முறையாகத் தடுப்புகள் அமைக்கப்படாததே சரிவுக்குக் காரணமாக இருப்பதால் நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் வலியுறுத்திவருகின்றனர்.