Published:Updated:

தூத்துக்குடி: தொடர் கனமழை; தாமதமான விடுமுறை அறிவிப்பு - இன்னலுக்குள்ளான மாணவர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மழையில் நனைந்தபடி செல்லும் மாணவர்கள்
மழையில் நனைந்தபடி செல்லும் மாணவர்கள்

மாணவர்கள் மழையில் நனைந்தபடியே பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றனர். பின்னர், மதியம் 12:30 மணிக்குப் பிறகு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.

வங்கக் கடலில் புதிதாக உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தமிழக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த இரு நாள்களாகப் பரவலாக மழை பெய்துவருகிறது.

இருள் சூழ்ந்த சாலை
இருள் சூழ்ந்த சாலை

இந்த நிலையில், இன்று காலை முதலே தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் இடைவிடாமல் பரவலாக கனமழை பெய்துவருகிறது.அதனால், சாலைகளில் மழைநீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. மாநகராட்சிப் பகுதிகளில் தாழ்வான பல இடங்களில் மழை வெள்ளம், குடியிருப்புகளைத் தேங்கி நிற்கிறது. ஏற்கெனவே, மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களில் தொடர்ச்சியாக கனமழை காரணமாக மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இன்று மாணவர்கள் மழையில் நனைந்தபடியே பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றனர். தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால், மதியம் 12:30 மணிக்குப் பிறகு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். இதையடுத்து அடுத்த ஒரு மணி நேரத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிட்டார். திடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் மழையில் நனைந்தும், குளிரில் நடுங்கியபடியும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.

மழையில் வீடு திரும்பிய மாணவர்கள்
மழையில் வீடு திரும்பிய மாணவர்கள்

மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக்கள், வேன்களால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பெற்றோர்களும் மழையில் நனைந்தபடியே தங்களின் குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர். தொடர் மழையால் பெற்றோர்களும் மாணவர்களும் ஆங்காங்கே ஒதுங்கியும் நின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்று அதிகாலை முதலே மழை பெய்துவருவதால் காலையிலேயே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருக்கலாம் எனப் பெற்றோர்கள் புலம்பிவருகிறார்கள். இது குறித்துப் பள்ளியில் குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்திருந்த பெற்றோர்கள் சிலரிடம் பேசினோம். ``இன்னைக்கு காலையில இருந்தே தூரலும் சாரலுமா இருந்துச்சு. குளிர்ந்த காத்தும் வீசுச்சு. அப்பவே ஸ்கூல், காலேஜ்களுக்கு லீவு விட்டிருக்கலாம். மழை கனமாப் பெய்த பிறகுதான் லீவுன்னு சொல்றாங்க. ஏற்கெனவே ஸ்மார்ட் சிட்டி வேலைகளால ரோடுகள் குண்டும் குழியுமா இருக்குது.

சாலைகளில் தேங்கிய மழைநீர்
சாலைகளில் தேங்கிய மழைநீர்

மழைத் தண்ணியும் தேங்கி ரோடே தெரியாம இருக்கு. இதுல சில இடங்கள்ல வடிகால் வேலையும் நடந்துட்டு வருது. கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் குளம் மாதிரி கிடக்கு. இதுல பிள்ளைகள் நடந்தோ, சைக்கிள்லயோ எப்படிப் போக முடியும்? நிறைய பள்ளிக்கூடங்களைச் சுத்தியும் தண்ணி தேங்கி நிக்குது. கனமழைன்னு வானிலை ஆராய்ச்சி மையத்துல அறிவிச்சும், காலையில மழை பெய்ஞ்சதும் லீவு விட்டிருக்கலாமே!

மழையில புத்தகப்பைகளும் நனைஞ்சு போச்சு. காய்ச்சல், தலைவலின்னு வந்துட்டா இந்த நேரத்துல பிள்ளைகளை யாரு பார்க்குறது? இனிமேலாவது மழை அறிவிப்பை கவனிச்சு கலெக்டர் நடவடிக்கை எடுக்கணும்” என்றனர் ஆதங்கத்துடன்.

மழையில் நனைந்தபடி செல்லும் மாணவர்கள்
மழையில் நனைந்தபடி செல்லும் மாணவர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உள், வெளிப் பிரகாரங்களிலும் மழைநீர் புகுந்தது. இதனால், பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் வெளிச்சுற்றுப் பகுதியில் கடற்கரை தடுப்புச்சுவர் திடீரென சரிந்து விழுந்தது. நல்லவேளையாகப் பக்தர்கள் யாரும் அந்த நேரத்தில் அங்கு இல்லாததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

`விபத்தில் சிக்கியவருக்கு உதவுங்கள்; எந்த பயமும் வேண்டாம்!’ -தூத்துக்குடி எஸ்.பி பகிரும் சட்டம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு