தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளராக இருப்பவர் பிரபாகரன். அவிநாசி அத்திக்கடவு திட்டம், மண் திருட்டு, சட்டவிரோத மதுபான விற்பனை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராகப் போராடிய சமூகசெயற்பாட்டாளர் ஆவார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பிரபாகரன், கணியூர் ஊராட்சித் தலைவர் வேலுச்சாமி, சமூக ஆர்வலர்கள் ஆனந்தகுமார் ஜெயக்குமார் ஆகியோரை கோவை கருத்தம்பட்டி காவல்துறை ரௌடிகள் பட்டியலில் இணைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து காவல்துறைக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்து நூதனமாக தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதுகுறித்து பிரபாகரன் கூறுகையில், ``அடிதடி, கொலை, கொள்ளை, கஞ்சா, லாட்டரி, சாராயம், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களைத்தான் ரௌடிகள் பட்டியலில் சேர்ப்பார்கள்.

ஆனால், தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட எங்களை கடந்த 2019-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் காவல்துறை ரௌடிகள் பட்டியலில் இணைத்திருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகும் அது அப்படியேதான் தொடர்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடி ஆட்சியர்களாலும், சமூகவிரோத சக்திகளாலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கிறோம். எங்களை காவல்துறை ரௌடிகள் பட்டியிலில் இணைத்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அதற்காகததான் எங்களது எதிர்ப்பை நூதனமாக பதிவு செய்திருக்கிறோம். விரைவில் எங்களது பெயர்களை ரௌடிகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக காவல்துறை அறிவித்துள்ளது.” என்றார்.