Published:Updated:

பழைமையான மொழி தமிழா...சம்ஸ்கிருதமா?- 12-ம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தால் புது சர்ச்சை

தினேஷ் ராமையா

பழைமையான மொழிகுறித்து தமிழக அரசு வழங்கிய 12-ம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பள்ளிக் கல்வித்துறை வளாகம்
பள்ளிக் கல்வித்துறை வளாகம்

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் இந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.12-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மகாகவி பாரதியின் முண்டாசின் நிறம் காவி நிறத்தில் இருந்தது, 7-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் சாதி அடையாளத்துடன் தலைவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

12ம் வகுப்பு ஆங்கில புத்தகம்
12ம் வகுப்பு ஆங்கில புத்தகம்
பள்ளிக் கல்வித் துறை

இந்த நிலையில், 12-ம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு தகவல், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் 142-வது பக்கத்தில், மொழிகள் மற்றும் அவை பயன்பாட்டில் இருந்துவரும் வருடம் தொடர்பான தகவல்கள் அளிக்கப்பட்டு, அவற்றை வரிசைப்படுத்தும்படி பயிற்சி ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது.

அதில், `தமிழ் கி.மு 300 முதல் பயன்பாட்டில் இருந்து வருவதாகவும், சம்ஸ்கிருதம் கி.மு 2000 முதலே பயன்பாட்டில் இருந்துவருவதாகவும் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல்தான் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

12ம் வகுப்பு ஆங்கில புத்தகம்
12ம் வகுப்பு ஆங்கில புத்தகம்
பள்ளிக் கல்வித் துறை

அதேபோல், சீன மொழி கி.மு 1250-ம் ஆண்டு முதலும், ஹீப்ரு கி.மு 1000, லத்தீன் கி.மு 75 ஆகிய ஆண்டுகள் முதலே பயன்பாட்டில் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், கிரேக்க மொழி கி.மு 1500 முதல் பயன்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.