Published:Updated:

கோவை: மீண்டும் வெடித்த சர்ச்சை! - காவி நிற திருவள்ளுவர் படத்தை அகற்றிய வேளாண் பல்கலைக்கழகம்!

அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் உருவப்படம்
அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் உருவப்படம்

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நூலகத்தில் காவி உடையுடன் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டது.

சமீபகாலமாக, திருவள்ளுவர் படங்களைவைத்து சர்ச்சைகள் வரிசைகட்டி நிற்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு, சி.பி.எஸ்.இ பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற திருவள்ளுவர் படம் சர்ச்சையைக் கிளப்பியது.

காவி உடையில் வரையப்பட்ட திருவள்ளுவர் படம்
காவி உடையில் வரையப்பட்ட திருவள்ளுவர் படம்
சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவர் படம்; தொடரும் சர்ச்சை - வலுக்கும் கண்டனங்கள்

கடந்த ஆண்டு, தமிழ்நாடு அரசின் கல்வித் தொலைக்காட்சியில் காவி நிற உடையில் திருவள்ளுவர் படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதற்குப் பலர், கறுப்பு நிற உடையில் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்தனர்.

இந்தநிலையில், திருவள்ளுவர் படத்தைவைத்து மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. அதன்படி, கோவை மருதமலை சாலையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக, நூலகத்தின் நுழைவுப் பகுதியில் காவி நிற உடையில் திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டிருந்தது.

வேளாண் பல்கலையில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படம்
வேளாண் பல்கலையில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படம்

இது சமீபத்தில் வைக்கப்பட்ட படம் என்று வெளியான தகவலால் பல்வேறு இடங்களிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. ஆனால், அந்தப் படம் நீண்ட ஆண்டுகளாக இருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.

“உலகப் பொதுமறையான திருக்குறளை வழங்கிய திருவள்ளுவர், அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். திருவள்ளுவர் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவரும் அல்லர் என்பதைக் குறிக்கும் வகையில், அரசு அலுவலகங்களில் வெள்ளை நிற உடையணிந்த திருவள்ளுவர் படத்தைவைக்க வேண்டும்” என்று தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், வேளாண் பல்கலைக்கழகத்தில் காவி நிற திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, உடனடியாக அந்தக் காவி நிற திருவள்ளுவர் படத்தை அகற்றி, வெள்ளை நிற உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு